RCB vs RR : இந்த ஒரு ரூல்ஸ் வந்ததால எல்லா மேட்ச்யும் க்ளோசா போயி முடியுது – வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி பேட்டி

Virat-Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று மதியம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.

RCB vs RR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக மேக்ஸ்வெல் 77 ரன்களையும், டூப்ளிசிஸ் 62 ரன்களையும் அடித்து அசத்தினர்.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி கூறுகையில் :

RCB

இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் வந்ததும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் எப்பொழுதுமே போட்டி இரு அணிகளுக்கும் சமமானதாக இறுதிவரை செல்கிறது. அதிலும் குறிப்பாக இந்த விதிமுறை வந்ததிலிருந்து பல போட்டிகள் மிகவும் நெருக்கமாக சென்று முடிந்துள்ளன.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியும் மிகவும் நெருக்கமான போட்டியாகவே இருந்தது. இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோர் விளையாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் 160 ரன்கள் வரை மட்டுமே வரும் என்று எதிர்பார்த்த வேளையில் அவர்கள் ஆடிய ஆட்டம் எங்களை 190 ரன்களுக்கு அழைத்துச் சென்றது. பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.

இதையும் படிங்க : CSK vs KKR : கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு தனது ஓய்வை உறுதிசெய்த தோனி – என்ன சொன்னாரு தெரியுமா?

அதிலும் குறிப்பாக சிராஜ் பந்து வீசிய விதம் அவர் ஏன் பர்பிள் கேப் வைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். எங்களது அணியை பந்துவீச்சில் அவர் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். அடுத்த போட்டியில் ஹேசல்வுட்டும் அணிக்குள் வந்து விடுவார். எனவே இன்னும் எங்களது ஆட்டம் இனி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement