CSK vs KKR : கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு தனது ஓய்வை உறுதிசெய்த தோனி – என்ன சொன்னாரு தெரியுமா?

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக ரஹானே 71 ரன்களையும், டேவான் கான்வே 56 ரன்களையும், சிவம் துபே 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

CSK vs KKR

- Advertisement -

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :

ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில் இந்த மைதானத்திலும் மஞ்சள் நிறத்தில் நிறைய ரசிகர்கள் வந்துள்ளனர். நிச்சயம் அவர்கள் அடுத்த முறை கேகேஆர் அணியின் ஜெர்ஸி அணிந்து கொண்டு தான் வருவார்கள் என்று நினைக்கிறேன்.

CSK

அவர்கள் இம்முறை எனக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாகவே மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவருக்குமே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஸ்பின்னர்கள் அவர்களது வேலையை சரியாக செய்ய முடிந்தது.

- Advertisement -

கொல்கத்தா அணியின் வீரர்களை துவக்கத்திலே ஆட்டமிழக்க வைத்தால் அவர்களுக்கு பிரஷர் இருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் அவர்களது அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகம். எனவே விரைவாக ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களை அழுத்தத்திற்குள் தள்ளினால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற முடியலாம் என்பதே எங்களுடைய திட்டம். அந்த வகையில் இந்த போட்டியில் அனைத்துமே சிறப்பாக நடந்து நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தோனி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மதிப்பு இப்போ தெரியாது, அவர் ரிட்டையர் ஆனதும் அந்த டீம் ரொம்ப கஷ்டப்பட போறாங்க – மோர்கன் கருத்தால் ரசிகர்கள் சோகம்

தோனி இந்த பேட்டியின் போது அடுத்த முறை கொல்கத்தா ரசிகர்கள் கே.கே.ஆர் ஜெர்சியில் வரலாம் என்று கூறியதும் பிரியாவிடை கொடுக்க நினைத்த ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியதையும் வைத்து பார்க்கும் போது நிச்சயம் அவர் இந்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என்றே தெரிகிறது.

Advertisement