ரோஹித் கிட்ட இருக்குற இந்த மறதி எவ்ளோ பெருசு தெரியுமா? விராட் கோலி பகிர்ந்த சுவாரசியம் – வைரலாகும் பதிவு

Kohli-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் போது டாஸ் போட்ட பிறகு அந்த டாசில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்ந்தெடுப்பதா? அல்லது பவுலிங்கை தேர்ந்தெடுப்பதா என்று தெரியாமல் குழம்பி ஒரு 15 நொடிகள் வரை பதில் சொல்லாமலேயே நின்றிருந்தார். பிறகு சில நொடிகள் தாமதத்திற்கு பிறகு அவர் இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று கூறினார்.

- Advertisement -

ரோகித் சர்மா இப்படி தலையில் கை வைத்து யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்த இந்திய வீரர்கள் சாஹல் மற்றும் சிராஜ் ஆகியோரது ரியாக்ஷன்களும் வீடியோவாக சமூக வலைதளத்தில் வைரலாகின. மேலும் ரோகித் சர்மாவின் இந்த விடயம் ரசிகர்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. டாசுக்கு பிறகு பேசிய ரோஹித் : நாங்கள் என்ன தேர்ந்தெடுக்க விரும்பினோம் என்பதை மறந்துவிட்டேன். டாஸ் முடிவை பற்றி நாங்கள் நிறைய விவாதித்தோம். எனவே பந்துவீச விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரோகித் இப்படி மறதியில் இருப்பது புதிது கிடையாது என்றும் ரோகித்திற்கு ஏகப்பட்ட விடயங்களில் மறதி ஒரு வியாதியாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரோஹித் குறித்து விராட் கோலி பேசுகையில் கூறியதாவது : ரோகித் மாதிரி ஒரு வேடிக்கையான மனிதரை நாம் பார்க்க முடியாது. அவர் எண்ணற்ற பொருட்களை மறந்து விடுவார்.

அவர் மறந்த பொருட்களின் எண்ணிக்கையை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி ஒரு நபரை நான் பார்த்ததே கிடையாது. சிறிய விஷயங்களை மட்டுமல்ல தினமும் பயன்படுத்தும் பல பொருட்களையும் அவர் மறந்து விட்டு வந்துள்ளார். ஒரு முறை நாங்கள் அணியின் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

- Advertisement -

அப்போது பாதி தூர பயணத்திற்கு பிறகு எனது ஐ பேடை விமானத்திலேயே விட்டு விட்டேன் என்று ரோகித் கூறினார். அதன் பிறகு அதனை பெறுவது மிக கடினமாக இருந்தது. இப்படி ஐ பேட் மட்டுமல்ல தினமும் உபயோகிக்கும் வாலட், போன், கல்யாண மோதிரம் என பல விடயங்களை அவர் ஹோட்டல் அறையிலோ அல்லது வெளியில் செல்லும் இடங்களிலோ மறந்து விட்டு வந்துவிடுவார். பல சந்தர்ப்பங்களில் இதே போன்ற நிலையை நாங்கள் கண்டுள்ளோம்.

இதையும் படிங்க : இதை மட்டும் நீ பண்ணு. அப்புறம் டாப்புக்கு போறயா இல்லையா பாரு. உம்ரான் மாலிக்குக்கு அட்வைஸ் கொடுத்த – முகமது ஷமி

அதன் பிறகு எப்பொழுது அணியின் பேருந்துக்கு சென்றாலும் ரோகித்திடம் சென்று எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டீர்களா? உங்களிடம் இருக்கிறதா? பாருங்கள் என்ற பின்னர் தான் பேருந்தில் ஏறி அடுத்த இடத்திற்கு செல்வோம் என்று விராட் கோலி வேடிக்கையாக பேசிய அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement