இதை மட்டும் நீ பண்ணு. அப்புறம் டாப்புக்கு போறயா இல்லையா பாரு. உம்ரான் மாலிக்குக்கு அட்வைஸ் கொடுத்த – முகமது ஷமி

Umran-and-Shami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டியானது நடைபெறவுள்ளது.

Mohammed Shami

- Advertisement -

இந்நிலையில் ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆட்டம் இழக்க முகமது ஷமியும் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

ஏனெனில் இந்த போட்டியில் ஆறு ஓவர்கள் பந்து வீசிய ஷமி ஒரு மெய்டன் உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு பலரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த ஒரு சந்திப்பில் உம்ரான் மாலிக் அவரை பேட்டி எடுத்தார்.

Umran Malik

அப்போது அந்த பேட்டியில் உம்ரான் மாலிக் தான் முன்னேறுவதற்கு சில ஆலோசனைகளை எனக்கு வழங்குங்கள் என்று முகமது ஷமியிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த ஷமி கூறுகையில் :

- Advertisement -

முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உன்னுடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. நீ இதைவிட இன்னும் சிறப்பாக செயல்பட இருக்கிறாய் என்பதை நான் நம்புகிறேன். உன்னுடைய திறமையை மட்டும் நீ நம்பு. வேகமாய் விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய். உன்னிடம் உள்ள திறமை இயல்பான ஒன்று. நல்ல வேகம் உன்னுடைய இயல்பான பந்துவீச்சிலேயே உள்ளது.

இதையும் படிங்க : சச்சின் – விராட் கோலி ஆகியோரில் சிறந்த ப்ளேயர் யார்? நீண்ட நாள் விவாதத்துக்கு கபில் தேவ் பதில்

எனவே அதை கட்டுக்கோப்பாக நேர்த்தியாக பயன்படுத்தினால் நிச்சயம் உன்னால் பெரிய உயரத்தை தொட முடியும். அதன் பிறகு உன்னை யாராலும் தொட முடியாது. நிச்சயம் உன்னுடைய பந்துவீச்சில் கடினமான உழைப்பு அவசியம். அந்த வகையில் நீ கடினமாக உழைத்து சிறப்பாக பந்து வீசினால் நாம் இருவருமே சேர்ந்து எதிரணிகளை மிரட்டலாம் என உம்ரன் மாலிக்கிற்கு முகமது ஷமி ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement