
இந்தியாவில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் 26-ம் தேதி மும்பையில் துவங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த முதலாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த மிகப்பெரிய தொடரானது 70 போட்டிகளுடன் அடுத்த இரண்டு மாதத்திற்கு ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக அந்த பதவியில் இருந்து வெளியேறியதால் புதிய கேப்டனாக மெகா ஏலத்தில் வாங்கப்பட்டு டூபிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த டூபிளெஸ்ஸிஸ் பெங்களூரு அணியை வழிநடத்துவது குறித்து தற்போது முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்த கருத்து ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : ஐபிஎல் ஏலத்தில் டூபிளெஸ்ஸிஸ்ஸை வாங்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.
ஏனெனில் வீரர்களின் ஓய்வு அறையில் நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கும் ஒரு வீரர் கேப்டனாக இருக்க வேண்டுமே தவிர கோரிக்கைகள் வைக்கும் தலைவர் அல்ல. எனவே இம்முறை பெங்களூரு அணியின் கேப்டனாக டூபிளெஸ்ஸிஸ் இருப்பது மகிழ்ச்சி. தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய சாதித்துள்ளார்.
அதைப்போன்றே பெங்களூரு அணியை தற்போது அவர் சிறப்பாக வழி நடத்தப்போவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயம் இம்முறை பெங்களூர் அணியிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிவரும் என்று கூறினார். மேலும் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசிய உள்ள கோலி கூறுகையில் : நான் என்னுடைய குடும்ப வாழ்க்கை மிகவும் நேசிக்கிறேன்.
இதையும் படிங்க : லக்னோ அணிக்கு எந்த மாதிரியான கேப்டனாக ராகுல் இருக்கவேண்டும் – கவுதம் கம்பீர் வெளிப்படை
எனக்கு என்று ஒரு குடும்பம் வந்து விட்டது. என் மகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன். என்னை பொறுத்தவரை தற்போது அளவற்ற மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன். எனவே களத்தில் நிச்சயம் என்னால் சிறப்பாக செயல்படமுடியும் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.