லக்னோ அணிக்கு எந்த மாதிரியான கேப்டனாக ராகுல் இருக்கவேண்டும் – கவுதம் கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் போட்டிகள் அடுத்த இரண்டு மாதங்கள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த தொடரானது இம்முறை பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள என்று அணிகளுடன் தற்போது பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் இணைந்துள்ளதால் இம்முறை போட்டிகள் ஒவ்வொன்றும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது உறுதி.

ipl

- Advertisement -

லக்னோ அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அந்த அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் கேப்டனாக சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் ரன்களை குவிக்கும் கேப்டனாக இருப்பது முக்கியம்.

ராகுல் தனது பேட்டிங்கில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது அவருக்கு நல்ல பேட்டிங் பார்ம் இருக்கிறது. எனவே அவர் பயமின்றி எந்த அச்சமும் இன்றி சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் அவருக்கு அனைத்து விதமான சுதந்திரமும் கிடைக்கும். மேலும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பேட்டிங்கில் ரன்களை குவிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி துணிச்சலான முடிவுகளை எடுக்கும் கேப்டனாகவும் ராகுல் திகழ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : போட்டியில் ரிஸ்க் எடுக்காவிட்டால் வெற்றி கிடைக்காது. எனவே ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : இது வெறும் பிரேக் தான், அடுத்த வருடம் முதல் மீண்டும் அவர்தான் தான் ஆர்சிபி கேப்டன் – அஷ்வின் கணிப்பு

ராகுல் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் மட்டும் கவனம் செலுத்துவார். டிகாக் விக்கெட் கீப்பர் பொறுப்பை பாத்துக்கொள்வார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் கேப்டனாக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது அவருக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் உதவும் என்று கூறியுள்ளார்.

Advertisement