என்னோட கரியர்ல அந்த இரண்டரை வருஷம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சி – மனம்திறந்த விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாட தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறார். தற்போது 34 வயதை எட்டியுள்ள விராட் கோலி அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாடுவது கடினம் என்பதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற வேண்டி முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்த விராட் கோலி தற்போது இந்த உலகக் கோப்பை தொடரிலும் வெற்றி பெற்று இரண்டு முறை இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அணியில் இருந்த வீரர் என்ற சாதனையை அஸ்வினுடன் சேர்ந்து படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 47-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடரிலேயே சச்சினின் 49 சதங்கள் என்கிற சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பலராலும் பேசப்படுகிறது. இருந்தாலும் விராட் கோலியின் கரியரில் கடினமான காலகட்டங்களாக பார்க்கப்படும் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னென்ன விடயங்கள் நடந்தது என்பது குறித்து விராட் கோலி மனதிறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 70-வது சதத்தை பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு 1020 நாட்கள் கழித்து 71-வது சதத்தை பதிவு செய்தார். இப்படி இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : கடந்த இரண்டு இரண்டரை ஆண்டுகள் எனக்கு மிகவும் கடினமான காலகட்டங்களாக அமைந்தது.

- Advertisement -

அந்த இடைவெளி எனக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்தது. முன்பெல்லாம் நான் சதம் விளாசும் போது ஆக்ரோஷமாக செலிபிரேட் செய்வதாக பலரும் கூறி வந்தனர். அதனை தொடர்ந்து நிறைய அறிவுரைகள் எனக்கு வந்தன. நான் இதை செய்வது தவறு, அதை செய்வது தவறு என்றெல்லாம் பல பேச்சுக்கள் இருந்து வந்தன. இருந்தாலும் நான் என்னுடைய சிறந்த பார்மில் இருந்த வீடியோக்களை எடுத்து அதனை பார்த்து அடுத்து எந்த முறையில் போட்டியை அணுக வேண்டும் என்று யோசித்து அதற்கேற்றார் போல் செயல்பட ஆரம்பித்தேன். அது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இதையும் படிங்க : எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சி .. ஆனாலும் என்னோட ஆசை இதுமட்டும் தான் – உ.கோ வாய்ப்பை இழந்த சாஹல் பேட்டி

அந்த இரண்டரை ஆண்டுகள் குறித்து என்னால் யாரிடமும் விவரிக்க முடியாது அந்த அளவிற்கு அந்த காலகட்டம் கடினமாக இருந்ததாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். இதுவரை உலக கோப்பை தொடரில் 26 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 46 ரன்கள் சராசரியுடன் 1030 ரன்களை குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்களும், ஆறு அரைசதங்களும் அடங்கும்.

Advertisement