இனிமே தான் என்னோட ஆட்டம் என்னன்னு பாக்க போறீங்க. வெகுண்டு எழுந்த – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ஆம் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் பெங்களூர் அணியும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அதன்படி பெங்களூர் அணி சார்பாக 3 வீரர்கள் இந்த ஏலத்திற்கு முன்னர் அணியில் நேரடியாக தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Kohli

- Advertisement -

அதில் முதன்மையாக விராட் கோலி 15 கோடி ரூபாய்க்கும், இரண்டாவதாக மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும், மூன்றாவதாக சிராஜ் 7 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் விராத் கோலி ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் அவர் ஒரு சீனியர் வீரராக அணியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

மேலும் புதிய கேப்டன் பெங்களூர் அணிக்காக செயல்பட இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் பெங்களூர் அணிக்காக தக்க வைக்கப்பட்டது குறித்து பேசியுள்ள விராட் கோலி கூறுகையில் : ஆர்சிபி அணியுடன் எனது பயணம் தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வரும்போது நான் நல்ல மனநிலையுடன் அவர்களிடம் பேசினேன்.

kohli 3

என்னுடைய பயணம் பெங்களூரு அணியுடன் எப்போதும் இருக்கும். அதன்படி இன்னும் மூன்று ஆண்டுகள் நான் பெங்களூர் அணிக்காக விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இனி வரும் சீசன்களில் எனது புதிய ஆட்டத்தை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி இனிவரும் சீசன்களில் நான் யார் என்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கே.எல் ராகுல் பஞ்சாப் அணியில் வெளியேற இதுதான் காரணமாம். எந்த அணிக்கு தேர்வாவார்? – விவரம் இதோ

அதோடு இனி வரும் காலங்களில் பெங்களூரு அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம் என்று ரசிகர்களுக்கு அவர் புத்துணர்ச்சி அளித்து உள்ளார். மேலும் நான் மிகுந்த நம்பிக்கையுடன் வரவிருக்கும் சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளேன் என்றும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement