கே.எல் ராகுல் பஞ்சாப் அணியில் வெளியேற இதுதான் காரணமாம். எந்த அணிக்கு தேர்வாவார்? – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியாவில் ஏப்ரல் மாதம் துவங்க உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்க விரும்பும் 4 வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். அதன்படி பல்வேறு அணிகளின் முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில் சில வீரர்கள் தங்களது அணிக்காக தக்கவைக்கப்பட்டனர்.

pbks

- Advertisement -

அந்தவகையில் பஞ்சாப் அணியில் முதல் வீரராக தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறியது அனைவரையும் அதிர வைத்துள்ளது. மேலும் அவர் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற என்ன காரணம் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக சுமார் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ராகுல் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தாலும் அவரது தலைமையில் பஞ்சாப் அணி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக ஒரு புதிய அணிக்காக விளையாட வேண்டும் என்கிற காரணத்தினாலேயே கேஎல் ராகுல் பஞ்சாப் அணியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

rahul

அதுமட்டுமின்றி தானாக முன்வந்து அவர் ஏலத்தில் கலந்து கொள்ள முடிவு எடுத்ததால் அணி நிர்வாகமும் அவரை பெரிதளவில் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி வரவிருக்கும் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள இருக்கும் இவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எத்தனை பேர் இருந்தாலும் ஒரே ஒரு தமிழக வீரர் மட்டுமே தக்கவைப்பு – அந்த வீரர் யார் தெரியுமா?

குறிப்பாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் புதிதாக இந்த தொடரில் இணைய இருப்பதால் அந்த இரு அணிகளில் ஒன்று இவரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி போடும் என்றும் ஏதாவது ஒரு அணிக்கு நிச்சயம் இவர் தலைமை தாங்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement