எத்தனை பேர் இருந்தாலும் ஒரே ஒரு தமிழக வீரர் மட்டுமே தக்கவைப்பு – அந்த வீரர் யார் தெரியுமா?

varun
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15-வது ஐபிஎல் சீசனுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு 15வது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மற்ற வீரர்களை ஏலத்தில் விடவேண்டும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL-bcci

- Advertisement -

அதன்படி நேற்று நவம்பர் 30-ஆம் தேதி வரை தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்திருந்த பிசிசிஐ அதிகாரபூர்வமான தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி 8 அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்டிருந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது.

இதில் ஏகப்பட்ட தமிழ்நாட்டு வீரர்கள் ஐபிஎல் அணிக்காக விளையாடி இருந்தாலும் ஒரே ஒரு வீரராக கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மட்டும் கொல்கத்தா அணியால் 8 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார்.

varun 1

அவரை தவிர்த்து தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின், ஷாருக் கான், சந்தீப் வாரியர், ஜெகதீசன், ஹரி நிஷாந்த் போன்ற வீரர்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான இந்த அறிவிப்பின்படி தமிழக வீரர்கள் சார்பாக வருண் சக்கரவர்த்தி மட்டும் கொல்கத்தா அணியால் ரீடெயின் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஓமைக்கிரான் அச்சுறுத்தல் : திட்டமிட்டபடி தென்னாபிரிக்க தொடர் நடைபெறுமா? – சவுரவ் கங்குலி பதில்

கொல்கத்தா அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தேர்வான பின்னர் மீண்டும் கொல்கத்தா அணியால் ரிடீயின் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement