ஓமைக்கிரான் அச்சுறுத்தல் : திட்டமிட்டபடி தென்னாபிரிக்க தொடர் நடைபெறுமா? – சவுரவ் கங்குலி பதில்

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கான்பூர் மைதானத்தில் டிராவில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsNZ 1

இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்குகு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி இந்தியாவில் இருந்து டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் பரவி வரும் ஓமைக்கிரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை நடத்துவதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த உருமாறிய ஓமைக்கிரான் வைரஸானது அதிக தீவிரத்துடன் பரவி வருவதால் திட்டமிட்டபடி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடர் நடைபெறுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

IndvsRsa

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேட்டி அளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் : தற்போது உள்ள சூழ்நிலையின் படி இந்த சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தின் முடிவு குறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இனி மஞ்சள் ஜெர்சியில் அவரை பார்க்க முடியாதா? என்ன இப்படி பண்ணிடீங்க – வருத்தத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்

டிசம்பர் 17ஆம் தேதி அங்கு முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாங்கள் இன்னும் யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது எனவே இதுகுறித்த முடிவை மத்திய அரசிடம் ஆலோசித்த பின்பே நாங்கள் அறிவிப்போம் என கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement