இனி மஞ்சள் ஜெர்சியில் அவரை பார்க்க முடியாதா? என்ன இப்படி பண்ணிடீங்க – வருத்தத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்

CSK
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட நேற்று நம்பர் 30ஆம் தேதி அறிவிக்க கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர்.
அதன்படி நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி தங்களது அணியில் தக்க வைத்துள்ள 4 வீரர்கள் குறித்த விவரங்களையும் தெளிவாக வெளியிட்டிருந்தது.

csk

அதன்படி சி.எஸ்.கே அணியின் முதல் வீரராக ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி 12 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா அணியில் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தல தோனிக்கு அடுத்து சின்ன தல ரெய்னா என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா கடந்த பல ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்காக முக்கிய நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வந்தார்.

Raina

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விளையாடாமல் இருந்த ரெய்னா கடந்த ஆண்டு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் மட்டுமே குவித்தார். இதன் காரணமாக அவர் ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் அவரை சென்னை அணி அணியிலிருந்தே நீக்கியுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் பெருந்தன்மை. ஜடேஜா 16 கோடிக்கு தக்கவைக்கப்பட காரணம் இதுதானாம் – விவரம் இதோ

மேலும் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுக்கவும் விருப்பம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக லக்னோ அணி அவரை அணியில் எடுத்து கேப்டனாகவும் செயல்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement