என் வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னிங்ஸ் இது. உங்களுக்கு என் நன்றி – ஆட்டநாயகன் கோலி பேசியது என்ன?

Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது கடைசி பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவு எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.

VIrat Kohli IND vs PAK

- Advertisement -

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் இந்த போட்டியில் இந்திய அணி எப்படி வெற்றி பெறப் போகிறது என்கிற பதட்டத்திற்கு மத்தியில் விராட் கோலி மற்றும் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றியை எட்டியது. அதிலும் குறிப்பாக விராட் கோலி 53 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசியிருந்த விராட் கோலி கூறுகையில் : இந்த இடத்தில் நிற்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பேச வார்த்தைகளே கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான சம்பவம் இங்கு நிகழ்ந்திருக்கிறது. பாண்டியா கடைசி வரை நம்மால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பிக்கை அளித்துக் கொண்டே இருந்தார். மேலும் கடைசிவரை நாம் களத்தில் இருந்தால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.

அதன்படி இறுதிவரை நாங்கள் இருவரும் விளையாடியதில் மகிழ்ச்சி. ஷாகின் அப்ரிடிக்கு எதிராக நான் அடிக்க ஆரம்பித்ததும் சில கணக்குகளை போட்டு அதற்கு அடுத்து ஹாரிஸ் ராப் மற்றும் நவாஸ் என அனைவரது பந்தையும் அடித்தோம். கடைசி கட்டத்தில் 8 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற போது இரண்டு சிக்ஸர்கள் நான் அடித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் நான் என்ன நினைத்தேனோ அதை மட்டுமே கருத்தாக கொண்டு விளையாடினேன். இதுவரை நான் மொகாலியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஒரு இன்னிங்ஸ்தான் என்னுடைய சிறப்பான என்று நினைத்து வந்தேன். ஆனால் அதைவிட ஒரு படி மேலாக இந்த ஆட்டம் என்னுடைய கிரிக்கெட் கரியரில் மறக்க முடியாத ஒரு ஆட்டமாக மாறி உள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs PAK : எங்களிடம் இருந்து அவங்க 2 பேர்தான் வெற்றியை பறிச்சாங்க – பாபர் அசாம் வருத்தம்

மேலும் ரசிகர்கள் குறித்து பேசிய விராத் கோலி கூறுகையில் : எனக்கு எப்பொழுதுமே ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆதரவையும் வாழ்த்துக்களையும் நான் பெறுவதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement