IND vs PAK : எங்களிடம் இருந்து அவங்க 2 பேர்தான் வெற்றியை பறிச்சாங்க – பாபர் அசாம் வருத்தம்

Azam
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவின்றி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது கடைசி பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

VIrat Kohli IND vs PAK

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 159 ரன்கள் குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலே அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து சர்வை சந்தித்த வேளையில் விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றியை நோக்கி நகர்ந்தது.

குறிப்பாக கடைசி மூன்று ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தும் இந்திய அணி இந்த போட்டியின் போது கடைசி பந்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 82 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பாபர் அசாம் கூறுகையில் :

எங்களது பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனாலும் விராட் கோலி மற்றும் பாண்டியா ஆகியோர் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டனர். இந்த ஆடுகளத்தில் புதிய பந்தில் விளையாடுவது என்பது எளிதான விடயம் கிடையாது. ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன்.

- Advertisement -

முதல் 10 ஓவருக்கு பிறகு எங்களது அணியின் வீரர்கள் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்த போட்டியில் எங்களின் வெற்றிக்கான வாய்ப்பும் இருந்தது. அதேபோன்று விராட் கோலியை மிடில் ஓவரிலேயே ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் கடைசி ஓவரை சுழல் பந்துவீச்சாளர் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க : IND vs PAK : வெற்றிக்கு பின் ஆனந்த கண்ணீரால் அழுத பாண்டியா – எதற்கு தெரியுமா? வீடியோ உள்ளே

ஆனாலும் அவர் சிறப்பாகவே பந்து வீசியதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் நிறைய விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம் என பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement