IND vs PAK : வெற்றிக்கு பின் ஆனந்த கண்ணீரால் அழுத பாண்டியா – எதற்கு தெரியுமா?

Hardik Pandya Crying
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதிய கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் அனல் தெறிக்க பரபரப்பாக நடைபெற்றது. வருண பகவான் ஆசிர்வாதத்துடன் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 0, முஹம்மது ரிஸ்வான் 4, சடாப் கான் 5, ஹைதர் அலி 2, முகமத் நவாஸ் 9 என் முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக இப்திகார் அகமது 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51 (34) ரன்களும் ஷான் மசூட் 5 பவுண்டரியுடன் 52* (42) ரன்களும் குவித்தனர்.

இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தரமாக பந்து வீசிய பாகிஸ்தானிடம் ஆரம்பத்திலேயே சரணடைந்த தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தலா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அப்போது காப்பாற்றுவார் என கருதப்பட்ட சூரியகுமாரும் 15 (10) ரன்களில் அவுட்டாக அக்சர் பட்டேலும் 2 ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அழுத பாண்டியா:
அதனால் 31/4 என்ற படுமோசமான தொடக்கத்தைப் பெற்றதால் கதை முடிந்ததாக ரசிகர்கள் கவலையடைந்த போது ஜோடி சேர்ந்த விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரத்தை போட்டு ஆரம்பத்தில் மெதுவாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்கள். அதனால் வெற்றியை நெருங்கிய இந்தியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே 40 (36) ரன்களில் அவுட்டாகி பாண்டியா அதிர்ச்சி கொடுத்தார். அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.

அதிர்ஷ்டவசமாக இடுப்பளவு வந்த அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தை ஒயிட்டாக வீசிய பவுலர் நவாஸ் அதற்கடுத்த பந்தில் விராட் கோலியை கிளீன் போல்ட்டாக்கினார். ஆனால் அது ஃப்ரீ ஹிட் ஹிட் என்பதை பயன்படுத்திய இந்தியா 3 ரன்கள் எடுத்த நிலையில் அதற்குடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் தேவையின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றார். அதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் ஒயிட் வீசிய நவாஸை அடுத்த பந்தில் தூக்கி அடித்து சிங்கிள் எடுத்த அஸ்வின் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அதனால் 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் கொடுத்த வரலாற்று தோல்விக்கு பாகிஸ்தானை பழி தீர்த்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தது. இந்த வெற்றிக்கு கொஞ்சமும் சந்தேகமின்றி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவருடன் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 40 ரன்களை விளாசியதுடன் பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

அதனால் போட்டி முடிந்ததும் அந்த அற்புதமான செயல்பாடு பற்றி வர்ணனையாளர்கள் கேட்டபோது “இந்தியா, இந்தியா” என்று முழங்கிய ரசிகர்களுக்கு முன்புறத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா வெற்றி மகிழ்ச்சியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரையும் கட்டுப்படுத்தாமல் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக அந்த சமயத்தில் சமீபத்தில் மறைந்த தன்னுடைய தந்தையை நினைத்துக்கொண்டே விளையாடியதாக பெருமிதத்துடன் அவர் பேசியது பின்வருமாறு.

“அந்த சமயத்தில் நான் எனது தந்தையை நினைத்து கொண்டு விளையாடினேன். ஆனால் அவருக்காக நான் அழவில்லை, என்னுடைய மகனை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் எனக்கு எனது தந்தை செய்து கொடுத்த உதவிகளை நான் எனது மகனுக்கு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. அதுவும் இன்று நான் இந்தளவுக்கு வருவேன் என்று தெரியாமலேயே அவர் என்னுடைய ஆறறை வயதில் எனக்காக வேலைகளை விட்டுவிட்டு குடிபெயர்ந்தார். எனவே அவருக்கு இந்த ஆட்டத்தை சமர்ப்பிக்கிறேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

Advertisement