172 ரன்களை 16.2 ஓவர்களில் நாங்கள் அடிக்க இதுவே காரணம். அதிரடிக்கான காரணத்தை சொன்ன – விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

Faf

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியின் துவக்க வீரரான விராட் கோலி 49 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 82 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : இந்த வெற்றி மிகப் பிரமாதமான ஒன்று. நான்காண்டுகளுக்கு பிறகு நாங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Maxwell

முதல் 17 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் கடைசி மூன்று ஓவர்களில் மும்பை பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டனர். அதேபோன்று இந்த ஆட்டத்தில் 16.2 ஓவர்களில் நாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சி. நாங்கள் சேசிங் செய்ய களமிறங்கும் போது நெட் ரன்ரேட்டை கணக்கில் வைத்து விளையாடினோம்.

- Advertisement -

அதன் காரணமாக இன்றைய போட்டியை 3 ஓவர்களுக்கு முன்னதாகவே முடித்ததில் மகிழ்ச்சி. பெங்களூருவில் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் மைதானம் நிரம்பி வழிந்ததை பார்க்கவே அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக யுஸ்வேந்திர சாஹல் படைத்த மாபெரும் சாதனை – விவரம் இதோ

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மும்பை போன்ற தரமான அணியை வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. நிச்சயம் இந்த வெற்றியை நாங்கள் இந்த தொடரில் தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement