IPL 2023 : டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக யுஸ்வேந்திர சாஹல் படைத்த மாபெரும் சாதனை – விவரம் இதோ

Chahal
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியானது நேற்று மாலை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் முதலில் தங்களது அணி பவுலிங் செய்யும் என்று அறிவித்தார்.

Chahal 2

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் 200 ரன்களை கடந்த முதல் அணியாகவும் ராஜஸ்தான் அணி தங்களது சாதனையை முன் வைத்துள்ளது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று 55 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இன்னிங்ஸ்சில் பெரிய ரன் குவிப்புக்கு சென்றது. அதன் பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்ததால் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Chahal 1

சொந்த மைதானத்தில் அவர்கள் பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி ஹைதராபாத் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கை அவர் வீழ்த்திய போது டி20 போட்டிகளில் அவர் வீழ்த்திய 300-ஆவது விக்கெட்டாக அது அமைந்தது. இந்திய வீரர் ஒருவர் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இதுவே முதல் முறை. இதன் காரணமாக இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : MI vs RCB : அவர் இல்லாம உங்களால ஒன்னும் பண்ண முடியாதா? மும்பை வீரர்களை விளாசிய – ரோஹித் சர்மா

அதுமட்டும் இன்றி நேற்று கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகளோடு சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் அவர் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் பிராவோ (183), மலிங்கா (170) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement