MI vs RCB : அவர் இல்லாம உங்களால ஒன்னும் பண்ண முடியாதா? மும்பை வீரர்களை விளாசிய – ரோஹித் சர்மா

Rohit Sharma 1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.

Kohli

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக திலக் வர்மா 46 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 84 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி 82 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு பெங்களூரு அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :

Rohit-Sharma

நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும் திலக் வர்மா மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான போராட்டத்தை அளித்தனர். அதன் காரணமாக ஓரளவு டீசன்டான ரன்களும் கிடைத்தது. இருந்தாலும் பந்துவீச்சில் நாங்கள் மிகவும் மோசமாக செயல்பட்டோம். இந்த போட்டியில் திலக் வர்மா விளையாடிய விதம் மிக அருமையாக இருந்தது.

- Advertisement -

அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது அவரது தைரியம் எங்களுக்கு தெரிகிறது. இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் இன்னும் 30 முதல் 40 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க வேண்டும் என்று ரோகித் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : கடைசி ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை நாங்கள் பும்ரா இல்லாமல் தான் விளையாடி வருகிறோம்.

இதையும் படிங்க : வீடியோ : முதல் ஓவரிலேயே ஹைதராபாத் கதையை முடித்த ட்ரெண்ட் போல்ட், கண்ணீரில் மும்பை ரசிகர்கள் – காரணம் என்ன

அவர் இல்லாதது மும்பை அணிக்கு ஒரு பின்னடைவு தான் இருந்தாலும் அவரை தவிர்த்து மற்ற பவுலர்கள் முன்வந்து தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என மும்பை வீரர்களை பற்றியும் அவர் சற்று கடிந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement