WTC Final : ஆட்டமிழந்ததும் நேரடியாக சாப்பிட சென்ற விராட் கோலி. கிண்டல் செய்த ரசிகர்கள் – விராட் கோலி கொடுத்த பதிலடி

Kohli
- Advertisement -

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது கடந்த ஜூன் 7-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்தது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் தற்போது ஆஸ்திரேலிய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் 31 பந்துகளை சந்தித்த விராட் கோலி இரண்டு பவுண்டரிகளுடன் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதேபோன்று அவர் ஆட்டம் இழந்ததும் நேரடியாக பெவிலியனுக்கு சென்று வருத்தத்துடன் அமருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கையில் தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட சென்று விட்டார். மேலும் கையில் பிளேட்டை வைத்துக் கொண்டு சாப்பிட்டவாரே இஷான் கிஷன் மற்றும் கில் ஆகியோருடன் ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இதனை கண்ட ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கர் 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆட்டமிழந்ததும் அடுத்த மூன்று நாட்களாக சாப்பிடவில்லை ஆனால் நீங்கள் இவ்வளவு பெரிய போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டு ஜாலியாக சாப்பிடுகிறீர்களா? என்று அவரை சமூக வலைதளம் மூலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : WTC Final : மைதானத்தில் இருந்து வெளியேறிய ஆஸி வீரர்களை மீண்டும் உள்ளே வர வைத்த சிராஜ் – மைதானத்தில் நடந்தது என்ன?

இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : நம்மை மற்றவர்களுக்கு பிடிக்காது போனாலும் அதை ஏற்றுக்கொள்ளும் திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களின் கருத்து சிறையிலிருந்து நீங்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ முடியும் என்று விமர்சனங்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement