WTC Final : மைதானத்தில் இருந்து வெளியேறிய ஆஸி வீரர்களை மீண்டும் உள்ளே வர வைத்த சிராஜ் – மைதானத்தில் நடந்தது என்ன?

Siraj
- Advertisement -

கடந்த ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 469 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது மெல்ல மெல்ல ரன்களை சேர்த்தது. நேற்று 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரகானே 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கே.எஸ் பரத் போட்டி ஆரம்பித்த முதல் ஓவரிலேயே 5 ரன்களுடன் நடையை கட்டினார்.

- Advertisement -

பின்னர் வந்த ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி அரை சதம் (51) அடிக்க இந்திய அணி படிப்படியாக ஓரளவு டீசன்டான ஸ்கோரை நோக்கி சென்றது. இறுதியில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை 296 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணியானது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான நிகழ்வு இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த முதல் இன்னிங்சின் கடைசி விக்கெட்டிற்கு முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடி கொண்டிருக்கையில் கேமரூன் கிரீன் வீசிய பந்தை தடுக்க நினைத்த சிராஜ் பந்தை கால் பகுதியில் வாங்கினார்.

- Advertisement -

இதன் காரணமாக அம்பயரும் உடனடியாக சிராஜ் lbw முறையில் ஆட்டம் இழந்ததாக அறிவித்தார். ஆனால் முகமது சிராஜ் நான் அவுட் இல்லை என்று மூன்றாவது நடுவரிடம் டிஆர்எஸ் முடிவுக்கு சென்றார். பின்னர் மூன்றாவது அம்பயர் பரிசோதிக்கையில் பந்து பேட்டில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிராஜ் கண்டிப்பாக ஆட்டம் இழந்துவிட்டார் என்று பெவிலியனை நோக்கி நடக்க துவங்கிவிட்டனர்.

இதையும் படிங்க : WTC Final : ஜாம்பவான்கள் டான் ப்ரேட்மேன், ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்த லார்ட் தாக்கூர் – 2021 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவாரா?

கிட்டத்தட்ட பெவிலியினை தாண்டி செல்லப் போகும் நேரத்தில் சிராஜ் ஆட்டமிழக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டதால் மீண்டும் அனைவரும் மைதானத்திற்குள் வந்தனர். இப்படி நடைபெற்ற இந்த சுவாரசியமான நிகழ்வு தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement