உலகக்கோப்பை 2023 : தோல்வியை சந்தித்த போதிலும் ரிக்கி பாண்டிங்கை முந்திய விராட் கோலி – விவரம் இதோ

Kohli-and-Ponting
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இந்த உலகக் கோப்பை சாம்பியன் படத்தினை ஆறாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் இந்திய அணி பெற்றுள்ள தோல்வி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலககோப்பை ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஆஸ்திரேலியா அணி இந்த கோப்பையை ஆறாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

- Advertisement -

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவுகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 54 ரன்களையும், கே.எல் ராகுல் 66 ரன்களையும் குவித்தனர்.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விராட் கோலி மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியில் 63 பந்துகளை சந்தித்த விராட் கோலி 54 ரன்கள் குவித்ததோடு சேர்த்து அவர் ஒட்டுமொத்தமாக இந்த உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் விளாசினார். அதோடு உலகக் கோப்பை போட்டியில் இதுவரை அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை அவர் தற்போது பின்தள்ளியுள்ளார்.

இதையும் படிங்க : இந்த உலகத்துலயே அந்த இந்திய பிளேயர் தான் துரதிஷ்டசாலியா இருப்பாரு.. ஆட்டநாயகன் ஹெட் பேட்டி

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 2278 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் விராட் கோலி தற்போது 1800 ரன்களை கடந்துள்ளார். மூன்றாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் 1743 ரன்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement