இந்த உலகத்துலயே அந்த இந்திய பிளேயர் தான் துரதிஷ்டசாலியா இருப்பாரு.. ஆட்டநாயகன் ஹெட் பேட்டி

Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய வென்றது. குறிப்பாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஃபைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது கோப்பையை முத்தமிட்டு புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 137, லபுஸ்ஷேன் 58* ரன்கள் அடித்து 43 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா நழுவி விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

துரதிஷ்டசாலியான வீரர்:
இந்த வெற்றிக்கு 47 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவின் கேட்சை அபாரமாக பிடித்ததுடன் 137 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த நாளை மறக்க மாட்டேன் என்று தெரிவிக்கும் அவர் சிறப்பாக விளையாடும் தோல்வி கண்ட ரோஹித் சர்மா தற்சமயத்தில் உலகிலேயே துரதிஷ்டசாலியான நபராக இருப்பார் என்று அனுதாபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதை மில்லியன் வருடங்களில் கூட எதிர்பார்க்கவில்லை. உண்மையாக அபாரமான நாள். வீட்டில் அமர்ந்திருப்பதை விட சிறப்பான நாள். குறிப்பாக முதல் 20 பந்துகளில் நான் விளையாடிய விதம் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தது. அதை நான் அப்படியே தொடர்ந்து எடுத்துச் சென்றேன். மார்ஷ் வந்து போட்டிக்கு நல்ல வண்ணத்தை உருவாக்கினார்”

- Advertisement -

“டாஸ் வென்று முதலில் பந்து வீசியது சிறப்பான முடிவு என்று கருதுகிறேன். பிட்ச் நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடும் என்று நானும் உணர்ந்தேன். இந்த வெற்றியில் நான் பங்காற்றியதில் நன்றாக உணர்கிறேன். இந்த உலகில் தற்சமயத்தில் ரோஹித் சர்மா துரதிஷ்டமான நபராக இருப்பார் என்று நினைக்கிறேன். இருப்பினும் நான் அவர் கொடுத்த கேட்சை பிடிக்கும் அளவுக்கு ஃபீல்டிங்கில் பயிற்சிகளை எடுத்தேன்”

இதையும் படிங்க: எதுக்கு தோத்தோம்னு இப்போ தெரியுதா? இந்தியாவை வீழ்த்திய பின் ஆஸி கேப்டன் கமின்ஸ் மகிழ்ச்சி பேட்டி

“மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்தாலும் நீங்கள் உங்களுடைய அணி வீரர்களை பார்த்து அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்பது முக்கியம். ஆடம் கில்கிறிஸ்ட், பாண்டிங் ஆகியோருடன் ஃபைனலில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் தொடர்ந்து அணியுடன் இருக்க விரும்புகிறேன் என்று எங்கள் அணி வீரரிடம் சொல்லி இருக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement