எதுக்கு தோத்தோம்னு இப்போ தெரியுதா? இந்தியாவை வீழ்த்திய பின் ஆஸி கேப்டன் கமின்ஸ் மகிழ்ச்சி பேட்டி

Pat Cummins
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரோஹித் 47, ராகுல் 66, விராட் கோலி 54 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 134, மார்னஸ் லபுஸ்ஷேன் 58* ரன்கள் எடுத்து 43 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வியது 100 கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை தூள் தூளாக்கியது.

- Advertisement -

மகிழ்ச்சி பேட்டி:
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்றது உட்பட ஆரம்பத்தில் சந்தித்த தோல்விகளில் நல்ல செயல்பாடுகளை சேமித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கலகலப்பாக தெரிவித்துள்ளார். இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது பற்றி கோப்பையை வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.

“இப்படி கடைசியில் அசத்துவதற்காக எங்களுடைய சிறந்தவற்றை ஆரம்பத்தில் சேமித்தோம் என்று நினைக்கிறேன். இத்தொடர் முழுவதும் நாங்கள் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்தோம். எனவே இப்போட்டியில் சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். நான் நினைத்ததை விட பிட்ச் சற்று மெதுவாக இருந்தது. இது போன்ற மைதானங்களில் நீங்கள் லெக் சைட் திசையில் 2 ஃபீல்டர்களை கேட்ச் பிடிப்பதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

“ஃபீல்டிங் துறையில் அசத்துவதற்கான வேலைகளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலிருந்து நாங்கள் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டு செய்தோம். 240 ரன்களுக்குள் இல்லையென்றாலும் 300 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தியிருந்தால் கூட நாங்கள் இந்த மைதானத்தில் வெல்ல முடியும் என்று நினைத்தோம். எனவே 240 ரன்களில் அவர்களை கட்டுப்படுத்தியதில் மகிழ்ச்சி. மார்னஸ் மற்றும் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்”

இதையும் படிங்க: எவ்வளவோ போராடியும் முடியல.. அந்த 2 தப்பால தோத்துட்டோம்.. உடைந்த நெஞ்சுடன் ரோஹித் பேட்டி

“எங்களுடைய தேர்வு குழுவினர் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர். குறிப்பாக ஹெட் காயத்தை சந்தித்த நிலையில் ரிஸ்க் எடுத்து விளையாடியதற்கு பலன் கிடைத்துள்ளது. அவர் எதிரணி பவுலர்கள் மீது அழுத்தத்தை போட்டு இந்த பெரிய போட்டியில் தம்முடைய கேரக்டரை காட்டினார். அந்த வகையில் லெஜெண்ட்டான அவரை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement