எவ்வளவோ போராடியும் முடியல.. அந்த 2 தப்பால தோத்துட்டோம்.. உடைந்த நெஞ்சுடன் ரோஹித் பேட்டி

Rohit Sharma Press
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 240 மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 241 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 7, ஸ்மித் 3, மார்ஷ் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதமடித்து 137 (120) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ரோஹித் ஏமாற்றம்:
அவருடன் மிடில் ஆர்டரில் சவாலை கொடுத்த லபுஸ்ஷேன் 58* ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதனால் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு 100 கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இந்நிலையில் பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்த தாங்கள் எந்தத் துறையிலும் போதுமான அளவுக்கு அசத்தாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ரோகித் சர்மா உடைந்த இதயத்துடன் பேசியது பின்வருமாறு. “முடிவு எங்கள் வழியில் செல்லவில்லை. நாங்கள் இன்று போதுமானதாக விளையாடவில்லை. எங்களால் முடிந்தளவுக்கு முயற்சித்தும் முடியவில்லை”

- Advertisement -

“20 – 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராகுல் மற்றும் விராட் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 270 – 280 ரன்கள் எடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் இடையே விக்கெட்டுகளை தொடர்ந்து விட்டோம். மேலும் 240 ரன்கள் மட்டுமே நீங்கள் எடுத்த போது விக்கெட்டுகளை எடுக்க விரும்புவீர்கள். ஆனால் அங்கே ஹெட் – லபுஸ்ஷேன் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்”

இதையும் படிங்க: சாதித்த ஆஸி.. மாறாத அதே சொதப்பலால் உடைந்த 100 கோடி நெஞ்சம்.. இந்தியாவின் தோல்விக்கான காரணம் இதோ

“நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம். ஆனால் இரவு நேரத்தில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சற்று சிறப்பாக இருப்பதது. அதை சாக்காக சொல்லவில்லை. நாங்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் இன்னும் ஒரு விக்கெட்டுகள் எடுத்திருந்தால் போட்டி எங்கள் பக்கம் வந்திருக்கலாம். இருப்பினும் அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த எதிரணியினருக்கு பாராட்டுக்கள்” என்று கூறினார்.

Advertisement