IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி படைத்த சாதனை – விவரம் இதோ

Virat-and-Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கோ நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Team India

- Advertisement -

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்து இருந்தது. அதனை தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்து அசத்தியது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். அதனை தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பிரம்மாண்டமான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

Kohli

இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளில் விளையாடிய விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கின் ஒரு சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் 96 பந்துகளை சந்தித்த அவர் 36 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 80 பந்துகளுக்கு பின்னர் 81-வது பந்தில் தான் அவர் நேற்று முதலாவது பவுண்டரி அடித்து இருந்தார். இந்த போட்டியின் போது 21 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர்களில் சேவாக்கை (8503) பின்னுக்கு தள்ளி 8504 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த இந்திய டெஸ்ட் வீரராக நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : இரட்டை சதத்தை தவறை விட்டாலும் – மற்றுமொரு சரித்திர சாதனை படைத்து அவுட்டான ஜெய்ஸ்வால்

இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (15921) ரன்களுடன் முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் (13265) ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், வி.வி.எஸ் லக்ஷ்மணன் (8781) ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement