கொழும்புவை தனது கோட்டையாக வைத்திருக்கும் கிங் கோலி, அப்டினா பாகிஸ்தானுக்கு சம்பவம் இருக்கு – 2 மாஸ் புள்ளிவிவரம் இதோ

Colombo Stadium 2
- Advertisement -

ஆசிய ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதே தொடரில் லீக் சுற்றில் மோதிய போட்டியை மழை வந்து ரத்து செய்ததால் ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் இம்முறை வெல்லப் போவது யார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டி கொழும்புவில் இருக்கும் பிரபலமான ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக 2012 ஆசிய கோப்பையில் தம்முடைய அதிகபட்ச ஸ்கோர் (183 ரன்கள்) அடித்தது முதல் 2015 உலகக்கோப்பையில் சதமடித்தது வரை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலும் விராட் கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதிலும் 2021 டி20 உலகக் கோப்பையில் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இந்தியாவுக்கு நங்கூரமாக நின்று காப்பாற்றிய அவர் 82* ரன்கள் விளாசி வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானின் தோற்கடித்து காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

கொழும்பு கோட்டை:
அதனால் ஷாஹீன் அப்ரிடி உட்பட்ட அனைத்து பாகிஸ்தான் பவுலர்களையும் தரமாக எதிர்கொண்டு போட்டியில் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிஷ்டவசமாக இன் சைட் எட்ஜ் முறையில் அவுட்டானார். இருப்பினும் எப்போதும் கிங் பேட்ஸ்மேனாகவே அறியப்படும் அவர் சூப்பர் 4 போட்டி நடைபெறும் கொழும்புவின் ஆர் பிரேமதாசா மைதானத்தை விசாகப்பட்டினம், ஆஸ்திரேலியா அடிலெய்ட் ஓவல் போன்ற தம்முடைய கோட்டை மைதானங்களில் ஒன்றாக வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் கடைசியாக அந்த மைதானத்தில் களமிறங்கிய 3 ஒருநாள் போட்டிகளில் முறையே 128*, 131, 110* என 3 போட்டிகளிலும் சதமடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக அந்த 3 போட்டிகளிலும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு சதமடித்துள்ள அவர் மொத்தமாக கொழும்பு மைதானத்தில் இதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 8 இன்னிங்ஸில் 519 ரன்களை 103.80 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார்.

- Advertisement -

மறுபுறம் அதே மைதானத்தில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஹரிதிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 முக்கியமான இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சேர்ந்து 15 இன்னிங்ஸில் 354 ரன்களை 27.23 என்ற சுமாரான சராசரியில் தான் எடுத்துள்ளனர். ஆனால் தனி ஒருவனை போல கடந்த 3 போட்டிகளில் சதமடித்து 103.80 என்ற அபாரமான சராசரியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி கொழும்பு மைதானத்தை தம்முடைய கோட்டையாக வைத்திருக்கிறார் என்று சொல்வதில் எந்த தவறுமில்லை.

இதையும் படிங்க: IND vs PAK : அடுத்த மேட்ச்லயும் எங்க பிளான் இதுதான். ஒரு நாளுக்கு முன்னதாகவே இந்தியாவிற்கு சவால் விட்ட – பாபர் அசாம்

எனவே லீக் போட்டியில் தவறவிட்டதை இந்த முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு கொடுத்து அவர் இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்கு முழுமையாக போராடுவார் என்று உறுதியாக நம்பலாம். இருப்பினும் அதற்கு ரிசர்வ் நாளிலாவது மழை வழி விட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement