IND vs PAK : அடுத்த மேட்ச்லயும் எங்க பிளான் இதுதான். ஒரு நாளுக்கு முன்னதாகவே இந்தியாவிற்கு சவால் விட்ட – பாபர் அசாம்

Babar-Azam-and-Rohit
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று நடைபெற்றிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான அணி ஏற்கனவே பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தற்போது அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறது.

அடுத்ததாக பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியே சூப்பர் ஃபோர் சுற்றின் இந்திய அணி விளையாடும் முதலாவது போட்டியாகவும் அமைய இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் இந்திய அணி 266 ரன்கள் குவித்தும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிரடி அறிவிப்பினை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக ஏற்கனவே விளையாடிய போது சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறியதால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் அவர் கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பஹீம் அஷ்ரப் இடம் பெற்றிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நாளைய போட்டியிலும் அதே அணி தான் தொடரும் என்றும் நவாஸ்க்கு பதில் பஹீம் அஷ்ரப் தான் விளையாடுவார் என்றும் பாபர் அசாம் அறிவித்திருந்தார். மேலும் இது குறித்து பேசிய அவர் : எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. ஏனெனில் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : எங்க மேல தப்பில்ல, ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக நாங்க தடுமாற காரணம் இது தான் – உண்மையை உடைத்த சுப்மன் கில்

பெரிய தொடர்களில் பெரிய போட்டிகளில் எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றியை பெற்று தருகின்றனர். எனவே அவர்கள் மீது நான் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான நாளைய போட்டியிலும் அவர்களது செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement