எங்க மேல தப்பில்ல, ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக நாங்க தடுமாற காரணம் இது தான் – உண்மையை உடைத்த சுப்மன் கில்

Shaheen Afridi Shubman Gill
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றியை பதிவு செய்து ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரிப்பதற்கு இரு அணிகளும் போராடுவதற்கு தயாராகியுள்ளன. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற இத்தொடரின் லீக் போட்டியில் சாகின் அப்ரிடிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் அவரிடம் பெட்டிப்பாம்பாக அடங்கி சரித்திர தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோகித் சர்மா கொஞ்சமும் முன்னேறாமல் மீண்டும் கிளீன் போல்டான நிலையில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட விராட் கோலியும் இன் சைட் எட்ஜ் முறையில் போல்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். இத்தனைக்கும் நிறைய முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை விடுத்தும் சாகின் அப்ரடி போன்ற இடது கை பவுலர்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னும் இப்படி திண்டாடுவதால் 2023 உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

காரணம் என்ன:
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கடி விளையாடி ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களை அதிகமாக எதிர்கொள்ளாததே அவருக்கு எதிராக இந்திய டாப் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதற்கு காரணம் என்று தொடக்க வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது பற்றி சூப்பர் 4 போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

“சர்வதேச அளவில் நீங்கள் விளையாடும் போது நிறைய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை உங்களுடைய கேரியரின் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்கனவே எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால் உலகின் மற்ற அணிகளை காட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் அதிகமாக விளையாடுவதில்லை. அவர்களிடம் நல்ல பவுலிங் அட்டாக் இருக்கிறது. எனவே அவர்களைப் போன்ற தரமான பவுலர்களை அடிக்கடி நீங்கள் எதிர்கொள்ளவில்லை என்றால் திடீரென்று ஒருநாள் விளையாடும் போது பெரிய வித்தியாசம் ஏற்படலாம்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்பு தொடர்களில் மோதுவதை முக்கியமாக நிறுத்தி விட்டது. அதே போல பாகிஸ்தான் பவுலர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படாததால் அவர்களை அடிக்கடி எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் 6 மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை திடீரென அவர்களை சந்திக்கும் போது இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக சுப்மன் கில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: RSA vs AUS : சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சரித்திர சாதனையை உடைத்த டேவிட் வார்னர் – புதிய லெஜெண்ட்டாக அசத்தல்

அதனை இந்த சூப்பர் 4 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டால் தான் வெற்றி காண முடியும் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்குகிறது என்றே சொல்லலாம். இதற்கிடையே கொழும்பு நகரில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் இப்போட்டி நடைபெறுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக அதை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரிசர்வ் நாளிலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement