இப்படில்லாம் நடக்கும்ன்னு நினச்சதில்லை.. நான் எப்போவும் அதுக்காக விளையாடல.. கிங் கோலி ஓப்பன்டாக்

Virat Kohli
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். கடந்த 2008 அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் கடந்த 15 வருடங்களாக உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 26,000 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றி நாயகனாக ஜொலித்து வருகிறார்.

குறிப்பாக 2012இல் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக சதமடித்த அவர் , 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்கள் குவித்த போட்டிகளில் இந்தியாவுக்கு தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் என்று சொல்லலாம். அந்த வகையில் சிறப்பாக செயல்படும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் போன்ற சச்சின் டெண்டுல்கரின் நிறைய சாதனைகளையும் வரிசையாக உடைத்து வருகிறார்.

- Advertisement -

விமர்சனங்களுக்கு பதிலடி:
ஆனால் அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்த போதும் நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்கள் அடித்த போதும் அவர் சொந்த சாதனைகளுக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தாம் எப்போதும் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை என்று தெரிவிக்கும் விராட் கோலி தம்முடைய சிறந்த ஆட்டத்தால் சாதனைகள் தான் தமது வழியில் தேடி வருவதாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை பற்றி பேசும் போது நான் என்னுடைய கேரியரில் இவ்வளவு சாதிப்பேன் என்று எப்போதும் நினைத்ததில்லை. இருப்பினும் கடவுள் இந்த செயல்பாடுகளுக்கு ஆசீர்வாதத்தை கொடுத்துள்ளார். இவற்றை செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டுள்ளேன். ஆனால் அது சரியாக நடக்கும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை”

- Advertisement -

“ஏனெனில் இந்த விஷயங்களை யாராலும் திட்டமிட முடியாது. இந்த 12 வருடங்களில் இவ்வளவு சதங்கள் அடிப்பேன் இத்தனை ரன்கள் அடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் எப்படி நம்முடைய அணிக்கு சிறப்பாக செயல்பட முடியும் என்பதிலேயே நான் கவனம் செலுத்துகிறேன். அதற்காக என்னுடைய வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்தேன். எனக்குள் எப்போதும் உந்துதல் இருந்தது. ஆனால் அதில் சில தடுமாற்றங்களையும் சந்தித்தேன்”

இதையும் படிங்க: இன்னும் 5 நாள் தான்.. இரக்கமற்ற இந்தியா அந்த உலக சாதனை படைப்பாங்க.. சோயப் அக்தர் பாராட்டு

“தற்போது என்னுடைய விளையாட்டை நான் எப்படி விளையாட விரும்புகிறேன் என்பதில் மட்டுமே ஒற்றை கவனத்தை செலுத்தி வருகிறேன். அதன் பின்பே நான் விளையாடிய வழியில் வெற்றி முடிவுகளும் சாதனைகளும் வருகின்றன” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் 2023 உலக கோப்பையில் தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement