இன்னும் 5 நாள் தான்.. இரக்கமற்ற இந்தியா அந்த உலக சாதனை படைப்பாங்க.. சோயப் அக்தர் பாராட்டு

Shoaib Akhtar 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியான 6 வெற்றிகளை பற்றி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு 99% உறுதியாகியுள்ளதால் 2011 போல இம்முறையும் நிச்சயம் சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக வந்துள்ளது.

ஏனெனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார்கள். சொல்லப்போனால் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி கூட கிடைத்த வாய்ப்பில் 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டி வருகிறார். அவர்களுடைய அசத்தலான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

அக்தர் பாராட்டு:
இந்நிலையில் ஷமி வந்ததும் இந்தியாவின் பவுலிங் அட்டாக் இரக்கமற்றதாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். மேலும் ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தால் வென்று வந்த இந்தியா தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்கள் இலக்கை பவுலர்களின் ஆதிக்கத்தால் கட்டுபடுத்தி வெல்லும் அளவுக்கு காலமும் டெம்ப்ளேட்டும் மாறியுள்ளதாகவும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் தொடர்ந்து வெற்றி நடை போடும் இந்தியா எஞ்சிய 5 நாட்களிலும் (3 லீக், 2 நாக் அவுட் போட்டி) வென்று கோப்பையை முத்தமிட்டு புதிய உலக சாதனை படைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவிக்கும் அவர் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஷமி வந்ததும் இந்தியாவின் பவுலிங் டெம்ப்ளேட் முழுவதுமாக மாறியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தை மூச்சு வாங்க விடாமல் பும்ரா மற்றும் ஷமி திணறடித்து விட்டார்கள்”

- Advertisement -

“அதன் பின் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தெறிக்க விட்டார்கள். இந்த வகையில் அவர்கள் இறக்கமற்ற பவுலிங் அட்டாக்காக மாறியுள்ளனர். ஒரு காலத்தில் இந்தியா நல்ல பேட்டிங் காரணமாக போட்டியை வெல்லும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது அவர்கள் பவுலிங்கை வைத்தும் வெற்றி பெறுகிறார்கள். குறிப்பாக வெறும் 229 ரன்கள் கட்டுப்படுத்தி அவர்கள் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அபாரமானதாகும்”

இதையும் படிங்க: இனிமேல் பாண்டியா இல்லனாலும் இந்தியா கவலைப்பட தேவையில்ல.. அவர் பாத்துக்குவாரு.. சைமன் டௌல் பாராட்டு

“எனவே இந்திய பவுலிங்கிற்கு தலை வணங்குகிறேன். குறிப்பாக பும்ரா சாதுரிமான வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இந்தியாவுக்கு தற்போது 5 நல்ல நாட்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஒருவேளை அவர்கள் ஃபைனல் வரை தோற்காமல் கோப்பையை வென்றால் அது உலக சாதனையாக இருக்கும். இதற்கு முன் ஒரு போட்டியில் கூட தோற்காமல் உலகக்கோப்பையை வென்ற சாதனையை நான் பார்த்ததில்லை. இந்தியாவுக்கு செமி ஃபைனல் அல்லது ஃபைனலில் மோசமான அதிர்ஷ்டம் இருக்காது” என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement