இனிமேல் பாண்டியா இல்லனாலும் இந்தியா கவலைப்பட தேவையில்ல.. அவர் பாத்துக்குவாரு.. சைமன் டௌல் பாராட்டு

Simon Doull
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தங்களுடைய முதல் 5 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதனால் செமி ஃபைனல் வாய்ப்பும் 99% உறுதியாகியுள்ளதால் நிச்சயம் இம்முறை கோப்பையை நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் உண்டாகியுள்ளது.

இந்த வெற்றியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் குல்தீப் யாதவ் வரை அனைவருமே முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

பாண்டியா இல்லைனாலும்:
அதே வேகத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிய அவர் உலகக் கோப்பையில் வெறும் 13 இன்னிங்ஸில் 40 விக்கெட்டுகளை சாய்த்து சாம்பியன் பவுலர் என்பதற்கு அடையாளமாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். அதன் காரணமாக பாண்டியா குணமடைந்து வந்தால் சிராஜை வேண்டுமானால் நீக்குங்கள் ஆனால் ஷமி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் முகமது ஷமி மிரட்டலாக செயல்பட்டு வருவதால் பாண்டியா இல்லாததைப் பற்றி கவலைப்படாமல் வெறும் 5 முதன்மை பவுலர்களுடன் தைரியமாக இந்தியா களமிறங்கலாம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமியை நான் விரும்புகிறேன். அவருடைய செயல்பாடுகளை நான் விரும்புவது இது முதல் முறையல்ல”

- Advertisement -

“இந்த உலகக் கோப்பையில் ஆரம்பத்தில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அவர் தற்போது தன்னுடையயா கம்பேக்கை அதிரடியான செயல்பாடுகளாக காண்பித்துள்ளார். குறிப்பாக அவர் சீமை மேல வைத்து வீசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சீம் பந்துகளை காட்சிப்படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. புதிய பந்துகளில் அவர் ஈட்டியை போல் அசத்தினார்”

இதையும் படிங்க: பும்ரா குழந்தை பவுலர்ன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்குட்டீங்க.. அப்துல் ரசாக் யூட்டர்ன் பேட்டி

“அதனால் தற்போது அவருக்கு இந்திய அணியில் சற்று நிரந்தரமான இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த நிலைமையில் ஹர்திக் பாண்டியா இல்லாமல் இந்தியா 5 பவுலர்களுடன் விளையாடலாமா? நிச்சயமாக விளையாடலாம்” என்று கூறினார். முன்னதாக உலகக்கோப்பையில் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த ஒரே இந்திய பவுலர் அதிக முறை 4 விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர் ஆகிய சாதனைகளையும் ஷமி படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement