2011 மேஜிக் வெற்றி முடிஞ்சு போன கதை.. 2023 உலக கோப்பைக்கு முன்பாக ரசிகர்களுக்கு தெம்பை ஊட்டிய.. கிங் கோலியின் பெட்டி

Virat Kohli 2011 World Cup.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் மோத உள்ளன. அந்த எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோற்று வரும் இந்தியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுதோல்வியை சந்தித்தது. அதனால் இம்முறையும் கோப்பையை வெல்லப் போவதில்லை என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் நடைபெற்று முடிந்த 2023 ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்த இந்தியா 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

விராட் கோலியின் நம்பிக்கை:
மேலும் அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா கேஎல் ராகுல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அப்படி முக்கிய நேரத்தில் முதுகெலும்பு வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமை தற்போது இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2011 உலகக் கோப்பை மேஜிக் வெற்றி நமது மனதில் நீங்காத மலரும் நினைவுகள் இடம் பிடித்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அது முடிந்த கதை என்று தெரிவிக்கும் அவர் தற்போது 2023 கோப்பையை வென்று ரசிகர்களுக்கு புதிய நினைவுகளை பரிசாக கொடுக்க விரும்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுடைய ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் ஆர்வம் தான் உலகக்கோப்பை வெல்வதற்கான எங்கள் உறுதிபாட்டை உங்களுக்குள் தோன்றுகிறது. கடந்த உலகக் கோப்பையின் நினைவுகள் எங்களுக்குள் இன்னும் மறையாமல் இருக்கிறது”

- Advertisement -

“குறிப்பாக மகத்தான 2011 உலகக்கோப்பை வெற்றி எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நாங்கள் எங்களுடைய ரசிகர்களுக்காக புதிய நினைவுகளை உருவாக்க விரும்புகிறோம். எனவே இந்த நம்ப முடியாத தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்களுடைய ரசிகர்களின் உணர்ச்சிகளை கச்சிதமாக படம் பிடிப்பதாக இருக்கிறது”

இதையும் படிங்க: வாய்ப்புக்காக ஏங்கி ஏங்கி பழகிடுச்சு.. ஆஸி தொடரில் கூட இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சாம்சன் போட்ட பதிவால் – ரசிகர்கள் சோகம்

“அதில் நாங்கள் எங்களுடைய ரசிகர்களின் கனவை நிஜமாக்குவதற்காக அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார். முன்னதாக 2011இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இருந்த வீரர்களிலிருந்து 2023 உலகக்கோப்பையில் விளையாடப் போகும் ஒரே வீரராக விராட் கோலி களமிறங்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement