- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிரைம்மினிஸ்டர் அணிக்கெதிரான பயிற்சி போட்டியை தவிர்த்த விராட் கோலி – கையில் எடுத்த யுக்தி

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

புதிய பயிற்சியை மேற்கொண்ட விராட் கோலி :

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டாவது போட்டிக்கு முன்னதாக 10 நாட்கள் இடைவெளி இருந்ததாலும், அடுத்த போட்டி பிங்க் பால் டெஸ்ட் போட்டி என்பதனாலும் இந்திய அணி ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணி அந்த பயிற்சி போட்டியில் தற்போது விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் இந்த பிரைம் மினிஸ்டர் அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் பயிற்சி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி போட்டியை அனுபவ வீரர்களான இவர்கள் இருவரும் தவிர்த்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆனாலும் பயிற்சி போட்டியை தவிர்த்த அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து தனியாக வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியினை மேற்கொண்டனர். அந்த வகையில் விராட் கோலி நெட்சில் வழக்கமாக த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் உடன் பயிற்சி செய்யும் வழக்கம் உடையவர்.

- Advertisement -

இவ்வேளையில் இஎந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் பும்ராவையே அழைத்து தனக்கு எதிராக பந்துவீசும் படி கூறியுள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்ற பும்ராவும் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசி இருக்கிறார். இப்படி இருவரும் ஒருங்கிணைந்து நீண்ட நேரம் பயிற்சியினை மேற்கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் அவரை தவறவிடும்.. அவர் போனது மிகப்பெரிய இழப்பு – ஹார்டிக் பாண்டியா

இப்படி விராட் கோலி பும்ராவை அழைத்து பயிற்சியை மேற்கொண்டதன் யுக்தி யாதெனில் : நிச்சயம் அடிலெய்டு மைதானத்தில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியின் போது கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் என்பதனால் பும்ராவை சமாளித்தால் நிச்சயம் எப்பேர்பட்ட ஆஸ்திரேலிய பவுலரையும் சமாளிக்க முடியும் என்பதனாலே அவர் இந்த வகையான பயிற்சியினை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -