அவர் சிறப்பா பேட்டிங் செஞ்சா மட்டுமே.. தெ.ஆ மண்ணில் இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கு.. ஜேக் காலிஸ்

Jacques Kallis 2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்தாலும் கடைசியாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் காத்திருப்பாகவும் இருக்கிறது.

ஏனெனில் சவாலான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளில் இந்தியா வரலாற்றில் குறைந்தபட்சம் ஒரு தொடரையாவது வென்று சாதனை படைத்துள்ளது. ஆனால் வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவில் மட்டும் 1992 முதல் இதுவரை சச்சின் முதல் விராட் கோலி வரை எத்தனையோ மகத்தான வீரர்கள் விளையாடியும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

காலிஸ் கருத்து:
குறிப்பாக 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் கடுமையாக போராடி 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்த இந்தியா கடைசியாக 2021/22இல் விராட் கோலி தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறை அந்த வரலாற்றை மாற்றி எழுத தயாராகும் இந்தியாவுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட தரமான வீரர்கள் கொண்ட முதன்மை அணியினர் களமிறங்க உள்ளனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி காண்பதற்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று ஜாம்பவான் ஜேக் காலிஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடர் எங்கே நடைபெற்றாலும் அவர் பெரிய வீரர். ஏற்கனவே அவர் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஓரளவு வெற்றிகரமாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டவர்”

- Advertisement -

“அவரால் மற்ற வீரர்களுக்கு தம்முடைய அனுபவத்தை கொடுக்க முடியும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் அதில் எம்மாதிரியான எதிர்பார்ப்புடன் விளையாட வேண்டும் என்ற அனுபவங்களை அவரால் கொடுக்க முடியும். இந்த தென்னாப்பிரிக்க தொடரில் அவர் பெரிய அளவில் அசத்துவதற்கு விரும்புவார் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: இந்தியா தெ.ஆ முதலாவது போட்டி துவங்குவதில் ஏற்பட்ட தாமதம். ஆரம்பமே இப்படியா? – என்ன காரணம்?

“தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்தியா இங்கே வெற்றி பெறுவதற்கு பெரிய உதவியை செய்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை இத்தொடரில் இந்தியா வென்றால் அது விராட் கோலி வெளிப்படுத்திய நல்ல செயல்பாடுகளின் காரணமாக இருக்கும்” என்று கூறினார். முன்னதாக தென்னாப்பிரிக்க மண்ணில் 14 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி 719 ரன்களை 51.36 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement