இந்தியா தெ.ஆ முதலாவது போட்டி துவங்குவதில் ஏற்பட்ட தாமதம். ஆரம்பமே இப்படியா? – என்ன காரணம்?

SKY-and-Markram
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்த வீரர்கள் பயிற்சியினை மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கின்றனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டிசம்பர் 10-ஆம் தேதி இன்று டர்பன் நகரில் துவங்க இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7:30 மணிக்கு போட்டிகள் துவங்கும் என்று ஏற்கனவே அட்டவணைப்படி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் திட்டமிட்டபடி இந்த முதலாவது போட்டி 7.30pm மணியை கடந்தும் துவங்காமல் இருந்து வருகிறது. ஏனெனில் டர்பன் நகரில் கடந்த சில நாட்களாகவே பெய்த மழை போட்டியை அச்சுறுத்திய வேளையில் போட்டி நாளான டிசம்பர் 10-ஆம் தேதியான இன்று மழை சற்று குறைவாக இருந்தது.

இதன் காரணமாக போட்டி முழுவதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக மழை விட்டு விட்டு செய்ய ஆரம்பித்தது. பின்னர் டாஸ் போடுவதற்கு முன்னதாகவும் மழை பெய்ததால் டாஸ் தற்போது தாமதம் ஆகி உள்ளது.

- Advertisement -

தற்போதைய நிலவரப்படி 7.40pm மணி வரை டாஸ் போடப்படாத வேளையில் இன்னும் சில மணி நேரங்கள் மழையில் நிற்காமல் பெய்தால் இந்த 20 ஓவர் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும் என்றும் ஒருவேளை மழை நிற்காமல் போனால் மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்படவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 6 மேட்ச் தான் இருக்குன்னு கவலைப் படாதீங்க.. நமக்கு ஐபிஎல் இருக்கு.. சூரியகுமார் தெம்பான பேட்டி

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த தென்னாப்பிரிக்க தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படும் வேளையில் முதல் போட்டியே இப்படி மழையால் பாதிப்பை சந்தித்துள்ளது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement