6 மேட்ச் தான் இருக்குன்னு கவலைப் படாதீங்க.. நமக்கு ஐபிஎல் இருக்கு.. சூரியகுமார் தெம்பான பேட்டி

Suryakumar Yadav 33
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்ற இந்தியா 2011 போல மீண்டும் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ளது.

2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் நிறைய தரமான வீரர்கள் கிடைத்தும் மேற்கொண்டு ஒரு டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தடுமாறி வருவது ரசிகர்களின் மற்றொரு மனக்குமுறலாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஐபிஎல் இருக்கு:
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் இதே போல ரோகித் சர்மா தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்தியா செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த தோல்விக்கு சீனியர்கள் முக்கிய காரணமாக அமைந்ததால் இம்முறை பாண்டியா தலைமையில் புதிய அணியை பிசிசிஐ களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்தியா அடுத்ததாக வெறும் 6 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான 2வது தர அணி களமிறங்கியுள்ள நிலையில் அடுத்ததாக ஜனவரி மாதம் சொந்த மண்ணில் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.

- Advertisement -

ஆனால் இந்த 6 போட்டிகளில் எப்படி தேவையான வீரர்களை கண்டறிந்து டி20 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராக முடியும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள 2024 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருப்பதால் அதைப் பற்றிய கவலை வேண்டாம் என்று தற்காலிக கேப்டன் சூரியகுமார் யாதவ் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “டி20 கோப்பைக்கு முன்பாக குறைந்த டி20 போட்டிகள் மட்டுமே இருப்பதாக உணர வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாட உள்ளோம் ”

இதையும் படிங்க: டி20 வேர்ல்டுகப்பை குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் செய்துள்ள அதிரடி மாற்றங்கள் – கப் அடிக்காமா விடமாட்டாங்க போல

“இந்த டி20 போட்டிகளில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். எனவே அனுபவமிக்க தரமான அணியை தேர்வு செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படும் என்று நான் கருதவில்லை. இப்போதுள்ள வீரர்கள் அனைவருக்கும் பொறுப்புடன் எப்படி வித்தியாசமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடுவது என்பது நன்றாக தெரியும்” என கூறினார்.

Advertisement