டி20 வேர்ல்டுகப்பை குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் செய்துள்ள அதிரடி மாற்றங்கள் – கப் அடிக்காமா விடமாட்டாங்க போல

WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலை வகித்திருந்த வேளையில் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. அதன் காரணமாக பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு சேர்த்து 25 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காகான அணியில் பல மாற்றங்கள் அவர்கள் செய்துள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில் மேட்ச் வின்னரான அதிரடி வீரர்களை அந்த அணி அதிகளவில் அணியில் இணைத்து அதிரடி காட்டியுள்ளது. அந்த வகையில் ரோவ்மன் பவல் தலைமையிலான இந்த டி20 அணியில் அதிரடி வீரர்களான கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரான், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்.

இதையும் படிங்க : ஒரு தோல்வியால் மோசமானவர் கிடையாது.. இந்திய அணிக்கு அவர் தேவை.. கெளதம் கம்பீர் ஆதரவு

அதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக டி20 அணியில் இடம்பெறாத ரூதர்போர்டு மற்றும் மேத்யூ போர்டு ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். அதுமட்டும் இன்றி உலக அளவில் நடைபெறும் டி20 லீக்குளில் தனது முரட்டுத்தனமான அதிரடியை வெளிப்படுத்தும் ஆண்ட்ரே ரசலுக்கும் அவர்கள் வாய்ப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு மேட்ச் வின்னர்களை அவர்கள் அணியில் சேர்த்ததின் மூலம் அவர்கள் டி20 உலக கோப்பை அணிக்கான திட்டத்தை தற்போதைய தீட்டி அணியை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement