ஒரு தோல்வியால் மோசமானவர் கிடையாது.. இந்திய அணிக்கு அவர் தேவை.. கெளதம் கம்பீர் ஆதரவு

- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக முடிந்தது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட ஃபார்மில் இருந்த இந்தியா கண்டிப்பாக 2011 போல கோப்பையை முத்தமிடும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி சுமாராக விளையாடி ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை கோட்டை விட்டது. அதனால் முழுமூச்சுடன் கடினமாகப் போராடிக் கோப்பையை வெல்ல முடியாததால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்து கண்கலங்கினார்கள்.

- Advertisement -

கம்பீர் ஆதரவு:
இந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை காரணத்தால் இந்தியாவுக்காக கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 4 முக்கிய தொடர்களில் வெற்றியை பதிவு செய்ய தவறினார்.

அதனால் அவருக்கு பதிலாக 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவமிகுந்த ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் ரோஹித் சர்மா மோசமான கேப்டனாகி விட மாட்டார் என்று தெரிவிக்கும் கௌதம் கம்பீர் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவரே கேப்டனாக செயல்பட வேண்டும் என ஆதரவு கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் மிகவும் நல்ல வேலையை செய்துள்ளார். ஐபிஎல் கோப்பைகளை வெல்வது எளிதல்ல. உலகக் கோப்பையிலும் அவர் அதிரடியாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய விதத்திற்கு ஒரு தோல்வி ரோகித் சர்மாவை மோசமான கேப்டனாகவோ அல்லது இந்தியாவை மோசமான அணியாகவோ மாற்றாது”

இதையும் படிங்க: ஒரு தோல்வியால் மோசமானவர் கிடையாது.. இந்திய அணிக்கு அவர் தேவை.. கெளதம் கம்பீர் ஆதரவு

“குறிப்பாக ஒரு தோல்வியை வைத்து ரோகித் சர்மாவை மோசமான கேப்டன் என்று சொல்வது நியாயமல்ல. எனவே ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்தால் அவர் டி20 உலக கோப்பையிலும் கேப்டனாக செயல்பட வேண்டும். அதே சமயம் ஃபார்மில் இல்லாத யாரையும் தேர்வு செய்யக்கூடாது. கேப்டன்ஷிப் என்பது பொறுப்பாகும். முதலில் நீங்கள் நல்ல வீரராக இருந்தால் தான் கேப்டனாக நியமிக்கப்படுவீர்கள். கேப்டனாக இருப்பவர் ஃபார்மை அடிப்படையாக வைத்து அணியில் நிரந்தரமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement