6 மாசம் கழிச்சு கோலி, ரோஹித்திடம் அது இருந்தா 2024 டி20 உ.கோ சான்ஸ் கொடுங்க.. பிசிசிஐக்கு கம்பீர் அறிவுரை

Gautam Gambhir 23
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடுவார்களா என்பது தற்சமயத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் இந்தியா வென்றது.

ஆனால் அதன் பின் ஐபிஎல் தொடர் வந்தும் கடந்த 15 வருடங்களாக வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இந்தியா கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனலில் இங்கிலாந்திடம் தோற்றது. அந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கம்பீர் கருத்து:
அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களை கொண்ட இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்குவதற்கான வேலையை பிசிசிஐ கடந்த வருடமே துவங்கி விட்டது. அதன் காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொண்டு ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை வீரர்கள் பெரிய பெயர் கொண்டிருப்பதை முக்கியமல்ல யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் என்று 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எனவே இப்போதிலிருந்து 6 மாதம் கழித்து நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முடிவில் நல்ல ஃபார்மில் இருந்தால் அந்த இருவரும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் இவை அனைத்தும் ஃபார்மை பொறுத்தது. ஃபார்ம் என்பதே வெற்றிக்கு முக்கியம். அந்த உலகக் கோப்பை ஐபிஎல் தொடருக்கு பின் நடைபெற உள்ளது நல்ல விஷயமாகும். எனவே ஒருவேளை ஐபிஎல் தொடரின் முடிவில் அவர்கள் நல்ல ஃபார்மில் இருந்தால் 100% உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் நான் பேட்டிங் மெதுவாக ஸ்டார்ட் பண்ண காரணம் அவர் தான்.. ருதுராஜ் வெளிப்படை

“என்னை பொறுத்த வரை ஃபார்ம் மட்டுமே முக்கியமாகும். டி20 உலகக் உலக கோப்பைக்கு நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அந்த வகையில் ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அவர்களை உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement