டி20 கிரிக்கெட்டில் நான் பேட்டிங் மெதுவாக ஸ்டார்ட் பண்ண காரணம் அவர் தான்.. ருதுராஜ் வெளிப்படை

Ruturaj Gaikwad 5
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு டர்பன் நகரில் நடைபெற உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது.

2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் வென்றது. எனவே அதே போல இத்தொடரிலும் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

மெதுவான துவக்கம்:
முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் கௌகாத்தியில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்த துவக்க வீரர் ருதுராஜ் பின்னர் அதிரடியாக விளையாடி 123* ரன்கள் விளாசி டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். அந்த வகையில் அப்போட்டி மட்டுமல்லாமல் பெரும்பாலும் அவர் பவர் பிளே ஓவர்களில் கூட ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி தம்முடைய இன்னிங்ஸை மெதுவாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தம்முடைய ஓப்பனிங் பார்ட்னர் ஜெய்ஸ்வால் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதால் எதிர்ப்புறம் தாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக ருதுராஜ் கைக்வாட் கூறியுள்ளார். அதே ஸ்டைலை தென்னாப்பிரிக்க தொடரிலும் தமக்கு வாய்ப்பு கிடைத்தால் தொடர்வேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஜெய்ஸ்வால் பெரும்பாலும் முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்யும் ஷாட்களை அடித்து பேட்டிங் செய்யக் கூடியவர். அவர் நின்று நிதானமாக விளையாடக் கூடியவர் அல்ல. எனவே மறுபுறம் நான் என்ன ரிஸ்க் இருக்கிறது என்பதை கணக்கிட்டு அணிக்கு என்ன தேவை என்பதற்கேற்றார் போல் விளையாட முயற்சிக்கிறேன். ஏனெனில் எதிர்ப்புறம் எப்படியும் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சிப்பார்”

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் நான் பேட்டிங் மெதுவாக ஸ்டார்ட் பண்ண காரணம் அவர் தான்.. ருதுராஜ் வெளிப்படை

“அதனால் மற்றொரு புறத்தை நிலையாகப் பிடித்து அவர் எதிர்புறத்தில் அதிரடியாக விளையாடுவதற்கான வழியை கொடுப்பது என்னுடைய வேலையாகும். அவருடன் நான் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறேன்” என்று கூறினார். இந்த நிலைமையில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளதால் தென்னாப்பிரிக்க தொடரில் ஜெய்ஸ்வால் – ருதுராஜ் ஓப்பனிங் ஜோடி மீண்டும் களமிறங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement