ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா 2 பேர்கிட்டயுமே நான் இதுமட்டும் தான் சொன்னேன் – சூரியகுமார் யாதவ் பாராட்டு

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முடிந்தது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தனர்.

இந்த தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றனர்.

- Advertisement -

ஏனெனில் தற்போது இந்திய அணியின் பின் வரிசையில் விளையாடி வரும் இவர்கள் இருவரும் பயமற்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவருக்கும் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரிங்கு சிங் போட்டியை முடித்து கொடுப்பதிலும், ஜிதேஷ் சர்மா களமறிங்க முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டுவதும் என அசத்தினார்கள்.

அவர்கள் இருவருமே கிட்டத்தட்ட 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியிருந்தது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்தம் இவர்கள் இருவரும் குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :

- Advertisement -

ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் தங்களது மாநில அணிக்காகவும் சரி, ஐபிஎல் தொடர்களிலும் சரி பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுகிறார்கள். அதற்கேற்றார் போன்று தற்போது இந்திய அணியிலும் அவர்களுக்கு பின் வரிசையிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே நான் அவர்களிடம் ஒரு விடயத்தை மட்டும் தான் கூறினேன்.

இதையும் படிங்க : போதும் சாமி.. அந்த ஐபிஎல் ரூல்ஸை இத்தோட நிறுத்துங்க.. பிசிசிஐக்கு வாசிம் ஜாபர் கோரிக்கை

உங்களுடைய மாநில அணிக்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் எவ்வாறு ஆடினீர்களோ அதே போன்று இங்கும் ஆட வேண்டும். மேலும் அணியின் வெற்றி மட்டும் தான் நமக்கு முக்கியம் சொந்த சாதனைகளை நினைத்து சிந்திக்கக் கூடாது. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அந்த வகையில் அவர்கள் இருவருமே மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியதாக சூரியகுமார் யாதவ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement