2024 டி20 உ.கோ : ஒரு சிக்ஸர் கூட அடிக்காம சதமடிக்கும் திறமை கொண்ட அவரோட டி20 கேரியர பத்தி பேச யாருக்கும் தகுதியில்ல – சஞ்சய் பங்கார்

- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளங்கி வருகிறார்.

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் ரசல், பொல்லார்ட் போன்ற சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் கிளாஸ் நிறைந்த வீரராக தம்முடைய ஸ்டைலில் செயல்பட்டு வரும் விராட் கோலி இதுவரை 4008* ரன்களை அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதாவது சரவெடியாக விளையாடாமலேயே அடித்து நொறுக்கும் ரசல், பூரான் போன்ற பல பேட்ஸ்மேன்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விராட் கோலி மிகவும் திறமையானவர் என்று சொல்லலாம்.

- Advertisement -

யாருக்கும் தகுதியில்ல:
குறிப்பாக மற்றவர்களைப் போல் காட்டுத்தனமாக அடிக்காமல் ஃபீல்டர்கள் நிற்கும் இடைவெளிகளை பார்த்து பவுண்டரிகளை அடிக்கும் ஸ்டைலை கொண்ட அவர் எதுவுமே வேலைக்காவில்லை என்றாலும் தன்னுடைய ஃபிட்னஸ் பயன்படுத்தி சிங்கிள் டபுள் எடுத்து வெற்றி பெற வைத்து விடுவார். அப்படிப்பட்ட அவரை சமீப காலங்களில் சற்று குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதால் 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த சீனியர்களோடு ஒரு சீனியர் வீரராக கழற்றி விடுவதற்கு தேர்வுக்குழு முயற்சிக்கிறது.

அதாவது 2024 டி20 உலக கோப்பையில் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்க நினைக்கும் தேர்வுக்குழு விராட் கோலியை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சிக்ஸர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமை கொண்ட விராட் கோலியின் டி20 கேரியர் பற்றி யாருக்கும் பேசுவதற்கு தகுதியில்லை என முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விமர்சகர்கள் மற்றும் கழற்றி விட நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதை விட 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மகத்தான இன்னிங்ஸ் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த விராட் கோலி 2024 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “100% அவர் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருக்க வேண்டும். குறிப்பாக கடந்த டி20 உலகக் கோப்பையில் அழுத்தமான போட்டிகளில் அபாரமாக விளையாடிய விதத்தை வைத்து ஏன் அவர் டி20 கிரிக்கெட்டிலும் அடுத்த டி20 உலக கோப்பையிலும் விளையாட கூடாது என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை”

“அழுத்தமான மிகப்பெரிய தருணங்களில் உங்களுடைய உணர்வுகள் உச்சத்தில் ஓடும் போது ஒரு சிறிய தவறு கூட பெரிய தோல்வியை கொடுக்கும். அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுக்கு பெரிய பிளேயர்கள் தேவை. அது போன்ற சமயங்களில் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் என்ன அல்லது கடந்த ஐபிஎல் தொடரில் என்ன செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. எனவே பெரிய போட்டிகளில் அசத்துவதற்கு பெரிய வீரர்கள் தேவை. அதை கடந்த இந்தியா – பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோலி காண்பித்தார்”

இதையும் படிங்க:இந்திய அணியில் அடுத்த காதல் ஜோடி ரெடி. இஷான் கிஷன் டேட்டிங் செய்யும் இந்த பிரபலம் – யார் தெரியுமா?

“மேலும் ஒவ்வொருவருக்கும் இங்கே தனித்தனியான ஸ்டைல் இருக்கிறது. நீங்கள் அதிரடியாக விளையாடினால் தான் ரன்கள் அடிக்க முடியும் என்று கிடையாது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து டி20 உலகக் கோப்பைகளையும் வென்றிருக்க வேண்டும். ஆனால் விராட் கோலி சிக்ஸர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமை கொண்ட பேட்ஸ்மேன். குஜராத்துக்கு எதிராக அவர் ஒரு சிக்சர் கூட அடிக்காமலேயே சதமடித்தார். குறிப்பாக தரையோடு தரையாக அடிக்கும் டெக்னிக் விராட் கோலியின் மதிப்பை காட்டுகிறது” என்று கூறினார்.

Advertisement