இந்திய அணியில் அடுத்த காதல் ஜோடி ரெடி. இஷான் கிஷன் டேட்டிங் செய்யும் இந்த பிரபலம் – யார் தெரியுமா?

Ishan-Kishan
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு கேப்டனாக செயல்பட்டை இஷான் கிஷன் தனது சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். இதுவரை 29 டி20 போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

Ishan-Kishan-1

- Advertisement -

அதுமட்டும் இன்றி கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அவர் மிகப்பெரிய தொகைக்கு கடந்த ஆண்டு மும்பை அணியில் தக்கவைக்கப்பட்டார்.

இப்படி ஐபிஎல் போட்டி மற்றும் சர்வதேச கிரிக்கெட் என இரண்டிலும் அசத்தும் அவருக்கு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஒரு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 25 வயதான இஷான் கிஷன் மாடல் அழகி ஒருவருடன் காதல் உறவில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Aditi

இந்திய அணியில் ஏற்கனவே ஏகப்பட்ட வீரர்கள் நடிகை மற்றும் மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்களை காதலித்த வேளையில் தற்போது புதிய காதல் ஜோடியாக இஷான் கிஷனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். அந்த வகையில் இஷான் கிஷன் காதலிக்கும் அந்த பெண் அதிதி ஹூண்டியா என்பவர்தான்.

- Advertisement -

கடந்த 2017-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா இறுதிப்போட்டியில் பங்கேற்ற அவர் அதே ஆண்டு நேஷனல் இந்தியா போட்டியில் பட்டமும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இன்ஸ்டாக்ராமிலும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவரும் இஷான் கிஷனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளத்தில் அதிகமாக பரவியிருந்த வேளையில் இருவருமே அவர்களது உறவு குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : அயர்லாந்து அணியை அலறவிட தீவிரமாக தயாராகும் பும்ரா – பி.சி.சி.ஐ பகிர்ந்த வைரல் வீடியோ

ஆனாலும் தொடர்ச்சியாக அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள். அதுமட்டும் இன்றி இஷான் கிஷன் எங்கு சென்று விளையாடினாலும் நேரில் சென்று போட்டிகளை கண்டு வரும் அதிதி அவ்வப்போது இஷான் கிஷனின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் டேட்டிங்-கில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement