அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாகவே காயம் காரணமாக எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடாமல் பும்ரா ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பும்ரா கேப்டனாகவும் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
கிட்டத்தட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் எவ்வாறு இந்த தொடரில் பந்து வீசப்போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே அயர்லாந்து சென்றடைந்த இந்திய அணியானது தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் பும்ரா பந்துவீசும் வீடியோவை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில் பும்ரா எவ்வளவு சிறப்பாக பயிற்சியில் பந்துவீசுகிறார் என்பதையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பும்ரா ஒரு பவுன்சர் பந்தையம், ஒரு யார்க்கர் பந்தையும் வீசுவது போன்று காட்சிகள் இடம் பிடித்துள்ளன.
இதன் மூலம் மீண்டும் பும்ரா தனது சிறப்பான திரும்பி விட்டார் என்றும் இந்த தொடரில் அவர் அனல்பறக்க பந்து வீசுவார் என்பதே அனைவரது எதிர்பார்க்காகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி டப்ளின் நகரில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.