ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது போட்டியில் விராட் கோலி எந்த இடத்தில் இறங்குகிறார்? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர அனுபவ வீரரான விராட் கோலி கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு கடந்த 14 மாதங்களாக இந்திய அணிக்காக அவர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்ததால் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் இடம்பெறாத விராட் கோலி இரண்டாவது போட்டிக்கு முன்னதாக தற்போது இந்தூர் சென்றடைந்து இந்திய வீரர்களுடன் பயிற்சி செய்து வருவதால் இரண்டாவது போட்டியில் நிச்சயம் விராட் கோலி விளையாடுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் விராட் கோலி எந்த இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறார்? என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் இந்திய அணியில் தற்போது அனைத்து இடங்களுக்குமே பலமான போட்டி நிலவி வருவதால் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது குறித்தே பலரும் பேசிவருகின்றனர்.

- Advertisement -

இந்த கேள்விக்கு பதிலாக விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக தான் களமிறங்குவார் என்று பல்வேறு தரப்பிலும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அல்லது ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரே துவக்க ஜோடியாக களமிறங்குவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

இதையும் படிங்க : பெருமையா இருக்கு.. மேட்ச் வின்னரை செலக்ட் பண்ணிருக்கீங்க.. லெஜெண்ட் சங்ககாரா பாராட்டு

மேலும் எப்பொழுதுமே வழக்கமாக விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மூன்றாவது இடத்திலேயே அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் விராட் கோலி அணியில் இணையும் பட்சத்தில் அவரது இடத்தில் விளையாடிய திலக் வர்மாவே வெளியேறுவார் என்பதனால் மூன்றாவது இடத்தில் தான் விராட் கோலி விளையாடுவார் என்றே தெரிகிறது.

Advertisement