விராட் கோலியை கம்பேர் பண்ணாதீங்க.. அது கிடைச்சிருந்தா சச்சின் 200 சதங்கள் அடிச்சிருப்பாரு.. ஸ்ரீசாந்த் அதிரடி

Sreesanth 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பேட்டிங் துறையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து வருகிறார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2/3 என சரிந்த போது 85 ரன்கள் விளாசிய அவர் நியூசிலாந்துக்கு எதிராகவும் அழுத்தமான சமயத்தில் 95 ரன்கள் அடித்து தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்தார். மேலும் அப்போட்டியில் 5 ரன்னில் சதத்தை தவற விட்டாலும் இதுவரை 48 சதங்கள் அடித்துள்ள அவர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்து இந்த தொடரிலேயே புதிய உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:
சொல்லப்போனால் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் போன்ற சச்சின் டெண்டுல்கரின் நிறைய சாதனைகளை உடைத்துள்ள விராட் கோலி விரைவில் 100 சதங்கள் உடைப்பார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போதுள்ள பேட்டிங்க்கு சாதகமான மைதானங்கள் அப்போது இருந்திருந்தால் சச்சின் 200 சதங்கள் அடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

எனவே எப்போதுமே சச்சினுடன் விராட் கோலி ஒப்பிடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் லெஜண்ட். ஆனால் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் எதிர்கொண்ட பவுலிங் தரத்தின் வித்தியாசத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அப்போதும் இப்போதும் அழுத்தம் ஒன்றாக இருந்தாலும் பவுலிங் தரத்தில் வித்தியாசம் இருக்கிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரிலேயே நிறைய சதங்கள் அடிக்கப்படுகிறது”

- Advertisement -

“சச்சினுடன் விராட் கோலி எப்போதும் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் விளையாடிய சகாப்தங்கள் வெவ்வேறானது. இந்த உலகில் ஒரே இடத்தில் 6 பந்துகளை வீசக்கூடிய ஒரு பவுலரை சொல்லுங்கள் பார்ப்போம். அதை செய்த மெக்ராத், வார்னே, வாசிம் அக்ரம் போன்றவர்களுக்கு சச்சின் சரியான பதிலை கொடுத்துள்ளார். விராட் கோலியும் அதே போல செயல்படுகிறார். இருப்பினும் இப்போதுள்ள பிட்ச்கள் அப்போதிருந்திருந்தால் சச்சின் 100 அல்ல 200 சதங்கள் அடித்திருப்பார்”

இதையும் படிங்க: அதை கூட எடுக்க முடியாத நீங்க உலக சாம்பியனா? இந்தியா திணறடிப்பாங்க.. இங்கிலாந்தை விமர்சித்த ஹர்பஜன்

“இதை விராட் கோலிக்கு எதிராக நான் சொல்லவில்லை. ஆனால் அந்த காலகட்டங்களில் பயிற்சியாளர்கள், வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறைவாக இருந்ததால் சச்சின் மற்றும் விராட் ஆகியோரை ஒப்பிட முடியாது. கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் இருந்தாலும் சச்சினை இந்தியாவில் கிரிக்கெட்டை மதமாக மாற்றினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதுள்ள டிஆர்எஸ், ஒரு போட்டிக்கு 2 பந்து போன்ற விதிமுறைகள் அப்போதிருந்திருந்தால் சச்சின் 200 சதங்கள் அடித்திருப்பார் என்றே சொல்லலாம்.

Advertisement