அதை கூட எடுக்க முடியாத நீங்க உலக சாம்பியனா? இந்தியா திணறடிப்பாங்க.. இங்கிலாந்தை விமர்சித்த ஹர்பஜன்

Harbhajan Singh 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து முதல் 5 போட்டிகளில் 4 தோல்வியை பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் அடி வாங்கிய அந்த அணி கத்துக்குட்டி வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியிலிருந்து மூச்சு வாங்குவதற்குள் மும்பையில் சரமாரியாக அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா மற்றுமொரு பெரிய தோல்வியை இங்கிலாந்துக்கு பரிசளித்தது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய அந்த அணி இலங்கைக்கு எதிராக வெறும் 156 ரன்கள் மட்டுமே எடுத்து மற்றுமொரு மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

உலக சாம்பியனா:
இத்தனைக்கும் டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற தரமான வீரர்கள் இருந்தும் தடுமாறும் அந்த அணி தற்போதைய நிலைமையில் அடுத்த 4 போட்டிகளில் வென்றாலும் மோசமான நன்றி கொண்டிருப்பதால் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பவுண்டரி, சிக்ஸர் என்பதை தாண்டி விக்கெட்டுகள் விழும் போது பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு தேவையான சிங்களை எடுப்பதற்கு கூட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதாக ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

அந்த வகையில் உலக சாம்பியனுக்கு எடுத்துக்காட்டாக செயல்படாத நீங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய லக்னோவில் நடைபெறும் அடுத்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தை வெளிப்படையாகவே எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்படுவதாக எப்போதுமே தெரியவில்லை. பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து வந்தும் காயத்தை சந்தித்ததால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை”

- Advertisement -

“பொதுவாக இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி சேசிங் செய்வதை விரும்புவார்கள். ஆனால் இத்தொடரில் பவுண்டரிகளை மறந்து விடுங்கள் அவர்களுக்கு சிங்கிள் கூட எப்படி எடுப்பது என்று சரியாக தெரியவில்லை. சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாடு வேண்டும் என்பதை மறந்ததைப் போல் அவர்கள் செயல்படுகின்றனர்”

இதையும் படிங்க: இது அவுட்டா? உறைந்த பாபர் அசாம்.. 50 ஓவர் கூட தாங்காத பாகிஸ்தானின் பரிதாபம்.. தென்னாப்பிரிக்கா அசத்தல்

“அதனால் அவர்கள் உலக சாம்பியன் போல் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அடுத்த போட்டியில் விளையாடுகிறது. ஆனால் அதில் இந்தியாவை அவர்களால் தோற்கடிக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. எனவே அவர்கள் அடுத்த தோல்வியை சந்திக்கலாம். சுழலுக்கு சாதகமான லக்னோவில் இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் விளையாடுவதை பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement