இது அவுட்டா? உறைந்த பாபர் அசாம்.. 50 ஓவர் கூட தாங்காத பாகிஸ்தானின் பரிதாபம்.. தென்னாப்பிரிக்கா அசத்தல்

Babar Azam
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவை ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக்கை 9 ரன்களில் அவுட்டாக்கிய மார்க்கோ யான்சன் மறுபுறம் தடுமாறிய இமாம்-உல்-ஹக்கையும் 12 ரன்களில் பேவிலியம் அனுப்பி வைத்தார். அதனால் 38/2 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற பாகிஸ்தானை அடுத்ததாக கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து மீட்டெடுக்க முயற்சித்த முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 31 (27) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இது அவுட்டா:
அந்த நிலைமையில் வந்த இப்திகார் அகமது தம்முடைய பங்கிற்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் 21 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தென்னாபிரிக்காவுக்கு வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த பாபர் அசாம் 50 ரன்கள் கடந்த போது டப்ரிஸ் சம்சி வீசிய 28வது ஓவரின் 5வது பந்தில் பின்பக்கமாக ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து தவற விட்டார்.

குறிப்பாக லெக் சைட் திசையில் கிட்டத்தட்ட ஒயிட் போல வந்த அந்த பந்தை பாபர் அசாம் தவற விட்ட போதிலும் அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் குவிண்டன் டீ காக் எட்ஜ் வாங்கியதாக உணர்ந்து அவுட் கேட்டார். அந்த நிலைமையில் பவுலர் உறுதியாக அவுட் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்த போதிலும் பாபர் அசாம் விக்கெட் என்பதால் தென்னாப்பிரிக்கா எடுத்துப் பார்ப்போமே என்று ரிவியூ எடுத்தது.

- Advertisement -

ஆனால் அதை சோதிக்கப்பட்ட போது ஸ்னிக்கோ மீட்டரில் ஸ்பைக் தெரிந்ததால் நடுவர் அவுட் கொடுத்தது தென்னாப்பிரிக்காவை கொண்டாட்டத்திலும் பாபர் அசாமுக்கு ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. குறிப்பாக நேரான கோணத்தில் பார்க்கும் போது பாபர் அசாம் பேட்டை கடந்து பந்து சென்ற பின்பே ஸ்பைக் ஏற்பட்டது. மேலும் அந்த சமயத்தில் நேரான கோணத்தில் பார்க்கும் போது பேட்டுக்கும் பந்துக்கும் சிறிய இடைவெளி இருப்பது தெரிந்ததால் இது எப்படி அவுட்டாக இருக்கும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வழக்கம் போல விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சயீத் முஸ்தாக் அலி தொடரில் மாஸ் சம்பவம் செய்த ரியன் பராக்.. வேறு யாரும் படைக்காத உலக சாதனை

அதனால் பாபர் அசாம் ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் 141/5 என சரிந்த பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் சவுத் ஷாக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 (52) ரன்களும், சடாப் கான் 43 ரன்களும், முகமது நவாஸ் 24 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் பாகிஸ்தானை 50 ஓவர்கள் விடாமல் 46.4 ஓவரிலேயே 270 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 4 விக்கெட்டுகளும் மார்க்கோ யான்சன் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இதைத்தொடர்ந்து செமி ஃபைனலுக்கு செல்ல 271 ரன்களை கட்டுப்படுத்திய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

Advertisement