சயீத் முஸ்தாக் அலி தொடரில் மாஸ் சம்பவம் செய்த ரியன் பராக்.. வேறு யாரும் படைக்காத உலக சாதனை

Riyan Parag
Advertisement

இந்தியாவின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்தாக் அலி கோப்பையின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் அக்டோபர் 27ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 113வது லீக் போட்டியில் அசாம் மற்றும் கேரளா ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கேரளா சுமாராக செயல்பட்டு 20 ஓவரில் 127/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேரளாவுக்கு அதிகபட்சமாக அப்துல் பாசித் 46* (31) ரோகன் குண்னும்மாள் 31 (32) ரன்கள் எடுக்க பந்து வீச்சில் அசத்திய அசாம் சார்பில் அதிகபட்சமாக அவினவ் சௌத்ரி 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 128 ரன்களை துரத்திய அசாம் அணிக்கு தாஸ் 6, சைக்கா 21, கதிகொங்கர் 14 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
அதனால் 48/3 என தடுமாறிய அசாம் அணிக்கு 4வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் சிப்சங்கர் ராய் 9, பிஷன் ராய் 2, டாஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 1 பவுண்டரி 6 சிக்சரை பறக்க விட்டு 57* (33) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.3 ஓவரில் 130/8 ரன்கள் எடுத்த அசாம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதன் காரணமாக கேரளா சார்பில் அதிகபட்சமாக ஜலஜ் சக்சேனா மற்றும் சிஜ்மோன் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றிக்கான முடியவில்லை. அதை விட ரியான் பராக் இத்தொடரில் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் பீகார், சர்வீஸஸ், சண்டிகர், சிக்கிம், இமாச்சல பிரதேசம், கேரளா ஆகிய அணிகளுக்கு எதிராக முறையே 61 (34), 76* (37), 76 (39), 53 (29), 72 (37), 57* (33) ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

அதாவது கடைசியாக களமிறங்கிய 6 டி20 போட்டிகளில் ரியான் பராக் தொடர்ந்து 6 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் 6 தொடர்ச்சியான இன்னிங்ஸில் 6 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரியான் பராக் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவோரோட சாதனையை வருங்கால இளம் வீரர்கள் உடைப்பது கஷ்டம் தான்.. ஸ்ரீசாந்த் கருத்து

இதற்கு முன் சர்வதேசம் அல்லது ஐபிஎல் அல்லது உலகில் நடைபெறும் எவ்விதமான டி20 தொடரிலும் எந்த வீரரும் இப்படி 6 தொடர்ச்சியான போட்டியில் 50+ ரன்கள் அடித்ததில்லை. இது போக இந்த 6 போட்டிகளிலுமே அவர் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையும் எடுத்து தம்மை வருங்கால ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் காண்பித்துள்ளார். சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரின் தடுமாறி வருவதால் விமர்சனங்களை சந்தித்துள்ளது ரியான் பராக் அதற்கு இந்த செயல்பாடுகளால் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement