அவோரோட சாதனையை வருங்கால இளம் வீரர்கள் உடைப்பது கஷ்டம் தான்.. ஸ்ரீசாந்த் கருத்து

Sreesanth 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

அதில் ரோகித் சர்மாவை விட சற்று அழுத்தமான 3வது இடத்தில் விளையாடும் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என்று இந்தியா சரிந்த போது மிகச் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல நியூசிலாந்துக்கு எதிராகவும் அழுத்தமான சமயத்தில் 95 ரன்கள் எடுத்த எடுத்த அவர் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் கருத்து:
இருப்பினும் அந்த போட்டியில் 5 ரன்னில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை விராட் கோலி தவற விட்டது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் விரைவில் 35 வயதை மட்டுமே தொடும் அவர் இன்னும் 2 – 4 வருடங்கள் விளையாடுவார் என்பதால் சச்சினை மிஞ்சி மொத்தமாக 120 சதங்கள் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சச்சினின் சாதனையை விராட் கோலி உடைத்தாலும் அவரின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பது கடினம் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். அதற்கான காரணத்துடன் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் அனைவரும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பற்றி பேசுகிறோம். ஆனால் விராட் கோலி அதிக சதங்கள், அரை சதங்கள், உலகக்கோப்பையில் அதிக ரன்கள் போன்ற சாதனைகளை உடைக்க போகிறார்”

- Advertisement -

“அதையும் வருங்காலத்தில் சிலர் உடைக்கலாம். ஆனால் வருங்காலத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலியின் சாதனைகளை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் மட்டுமல்லாமல் பொதுவாகவே அவர் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பசியுடன் மட்டும் செயல்படுவதில்லை. மாறாக ஃபீல்டிங் செய்தாலும் முழுமையான ஆர்வம் மற்றும் எனர்ஜியுடன் செயல்படுவார்”

இதையும் படிங்க: சாக்கு சொல்லாதீங்க.. விராட் கோலியும் அதை செய்யலயே.. இங்கிலாந்து அணியை விளாசிய நாசர் ஹுசைன்

“இந்தியாவில் கிரிக்கெட்டை மதம் என்றும் மற்றொரு உணர்ச்சி என்றும் சொல்வார்கள். அவர் எப்போதுமே அந்த உணர்ச்சியுடன் விளையாடுவார். அவர் விளையாடும் விதம் விளையாட்டு முதல் கலை வரை அனைத்தும் வெளிப்பாட்டை பெறுகிறது. எனவே விராட் கோலி நீங்கள் தொடர்ந்து விரும்பும் வரை விளையாடுங்கள்” என்று கூறினார்.

Advertisement